ADDED : ஏப் 08, 2026 04:24 AM
பெங்களூரு: பெங்களூரு டி.ஜே.ஹள்ளி ஷாம்புரா சாலையில் உள்ள முனேஷ்வர் நகரில் பல கடைகள் இருக்கின்றன. இங்குள்ள மரச்சாமான் கடையில் நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு திடீரென தீப்பிடித்தது. கடைக்கு முன்னால் நின்று கொண் டிருந்த பைக், கார் உள்ளிட்டவாகனங்களில் தீ பரவியது. அத்துடன் அருகில் இருந்த மாட்டு கொட்டகைக்கும் தீ பரவியது.
கொட்டகையில் இருந்த, 20க்கும் மேற்பட்ட மாடுகள் பயங்கரமாக கத்தின. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித் தனர். இதனிடையில், தீ கொட்டகை முழுதும் பரவியது. சம்பவ இ டத்திற்கு வந்த தீய ணைப்பு வீரர்கள் தீயை அணைக்க பாடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. இருப்பினும், ஆறு மாடுகள் தீயில் சிக்கி உயிரிழந்தன. படுகாயம் அடைந்த, 20 மாடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து, மாடுகளின் உரிமையாளர் ஸ்ரீனிவாஸ் கூறியதாவது:
நான், 25 ஆண்டுகளாக மாடு வளர்ப்பு, பால் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்திலேயே குடும்பத்தை நடத்துகிறேன். என் குடும்பமே மாடுகளை நம்பித்தான் இருக்கிறது. தற்போது, மாடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்பால், என் குடும்பம் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தீ விபத்து குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
