தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தனியாக மலையேற்றம் செல்வோருக்கு தடை விதிக்க வனத்துறை ஆலோசனை

 தனியாக மலையேற்றம் செல்வோருக்கு தடை விதிக்க வனத்துறை ஆலோசனை

 தனியாக மலையேற்றம் செல்வோருக்கு தடை விதிக்க வனத்துறை ஆலோசனை


ADDED : ஏப் 08, 2026 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2026 04:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: மடிகேரியின் தடியண்டமோளில், ஐ.டி., ஊழியர் காணாமல் போனதால், விழித்துக்கொண்ட வனத்துறை, தனியாக மலையேற்றம் செல்வதற்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.

கேரளாவை சேர்ந்த ஐ.டி., ஊழியர் சரண்யா. தன் நண்பர்களுடன் குடகு மாவட்டம் மடிகேரியின் தடியண்டமோள் பகுதிக்கு மலையேற்றத்துக்காக வந்திருந்தார். அப்போது அவர் வழி மாறி, வனப்பகுதியில் காணாமல் போனார். நான்கு நாட்களுக்கு பின், வனத்துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

சரண்யாவுக்கு மலையேற்றம் புதிய விஷயம் அல்ல. இதில், அதிகமான அனுபவம் மிக்கவர். ஆனாலும், அறிமுகமில்லாத பாதையில் தனியாக சென்றதால், காணாமல் போக நேரிட்டது.

இந்த சம்பவத்துக்கு பின், விழித்து கொண்ட வனத்துறை, சுற்றுலா பயணியர் தனியாக மலையேற்றம் செல்ல தடைவிதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.

இதுகுறித்து, வல்லுநர்கள் கூறியதாவது:

அதிகமான அனுபவம் உள்ளவர்களாக இருந்தாலும், அறிமுகம் இல்லாத பாதையில், மலையேற்றம் செல்வது நல்லது அல்ல. தாங்கள் செல்லவிருக்கும் பாதைகள் குறித்து, முன் கூட்டியே தகவல் சேகரித்து கொள்ள வேண்டும்.

ஒருவரே செல்லும் போது, தாங்கள் பயணிக்கும் பாதையை, தெளிவாக அடையாளம் கண்டு கொண்டு, அதன்படியே பயணிக்க வேண்டும். தெளிவான பாதையை அடையாளம் காட்ட பல செயலிகள் உள்ளன. இந்த சாதனங்களை மலையேற்றம் செல்வோர் கட்டாயமாக கொண்டு செல்ல வேண்டும்.

டார்ச் லைட், உணவு, குடிநீர், விசில், போர்ட்டபிள் சார்ஜர், முதலுதவி சிகிச்சை கிட் போன்றவற்றை உடன் கொண்டு செல்வதும் அவசியம். குடகின் சோமவாரபேட்டின், பீடஹள்ளியில் இருந்து துவங்கும் குமார பர்வத மலையேற்றம் செல்ல, தெளிவான பாதைகள் உள்ளன. இந்த பாதைகள் வனப்பகுதி வழியாகவே அதிகம் செல்கின்றன. எனவே போதிய பாதுகாப்பு வசதிகளை செய்ய வேண்டும்.

இப்பாதையில் அறிவிப்பு பலகைகள், எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். ஓய்வு ஷெல்டர்கள், தொடர்பு மையங்கள் வசதி செய்வது அவசியம். மீட்புக்குழுக்கள் அமைப்பது, முகாம்கள் அமைத்து மருத்துவ சேவைகள் கிடைக்க செய்ய வேண்டும்.

தடியண்டமோள் மலையில், மலையேற்றம் செல்வோரிடம், வனத்துறை தலா, 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது. ஆனால், மலையேற்றம் செல்வோருடன், வனத்துறை ஊழியரை அனுப்புவது இல்லை. குறைந்தபட்சம் ஒருவரையாவது அனுப்பினால், மலையேற்றம் செல்வோர் பாதுகாப்பாக திரும்ப உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us