UPDATED : நவ 23, 2026 12:00 AM
ADDED : நவ 22, 2026 08:12 PM
துமகூரு: சிறுத்தையின் தாக்குதலுக்கு, ஆறு ஆடுகள் பலியாகியுள்ளன.
துமகூரு மாவட்டம், சிரா தாலுகாவின் கும்பாரஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் மாரப்பா, ஆடுகள் வளர்க்கிறார்.
வீட்டின் முன் உள்ள கொட்டகையில், ஆடுகளை அடைத்து வைத்திருந்தார். நேற்று அதிகாலை உணவு தேடி, கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை, கொட்டகையில் இருந்த ஆடுகளை தாக்கியதில், ஆறு ஆடுகள் பலியாகின.
மாரப்பா, காலையில் கொட்டகைக்கு வந்த போது, ஆடுகள் இறந்து கிடப்பது தெரிந்தது. கும்பாரஹள்ளி கிராமத்தின் சுற்றுப்பகுதிகளில், பல நாட்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது.
இது குறித்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும், சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
இதன் விளைவாக, நேற்று ஆறு ஆடுகள் பலியாகின. இந்த சம்பவத்தால் கோபமடைந்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
