/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கால்வாயில் மூழ்கி 6 பேர் உயிரிழப்பு
/
கால்வாயில் மூழ்கி 6 பேர் உயிரிழப்பு
ADDED : அக் 08, 2025 03:28 AM

துமகூரு : மார்கோனஹள்ளி அணை கால்வாயில் மூழ்கி, ஒரே குடும்பத்தின் ஆறு பேர் உயிரிழந்தனர்.
துமகூரு நகரின் பி.ஜி.பாளையாவில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர், நேற்று காலை குனிகல்லின், மாகடிபாளையா கிராமத்தில் உள்ள தங்களின் உறவினர் வீட்டுக்கு வந்தனர். மதியம் உணவை முடித்து கொண்டு, மார்கோனஹள்ளி அணையை பார்க்க வந்தனர்.
தொடர் மழை பெய்ததால், அணையை ஒட்டியுள்ள கால்வாயில், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதை பொருட்படுத்தாமல், விளையாடுவதற்காக நீரில் இறங்கினர். அப்போது ஷபானா, 44, தபசும், 45, மஹீப், 1, மிப்ரா, 4, சாஜியா, அர்பின் ஆகியோர் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.
இதை கவனித்த அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த ஹுலியூர்துர்கா போலீசார், தீயணைப்பு படையினர் கால்வாயில் தேடினர்.
சாஜியா, அர்பின் உடல்கள் கிடைத்தன. மற்ற நால்வரின் உடல்களை தேடி வருகின்றனர்.
விஜயநகரா மாவட்டம், ஹொஸ் பேட் தாலுகாவின், ஹம்பினகட்டே கிராமத்தில் வசித்தவர்கள் ராஜா பாக்ஷி, 30, இவரது சகோதரர் இமாம், 26. இவர்கள் நேற்று மதி யம் மரியம்மனஹள்ளியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வந்தனர்.
நிகழ்ச்சி முடிந்த பின், துங்கபத்ரா அணைக்கு சென்றனர். அணை அருகில் நடந்து செல்லும் போது. ஒருவர் கால் தவறி, நீரில் விழுந்தார். சகோதரரை காப்பாற்ற முயற்சித்த மற்றொரு சகோதரரும், நீரில் மூழ்கினார். இருவரும் உயிரிழந்தனர்.