/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'ஹனிடிராப்' மூலம் பணம் பறிப்பு பெண் உட்பட 6 பேர் கைது
/
'ஹனிடிராப்' மூலம் பணம் பறிப்பு பெண் உட்பட 6 பேர் கைது
'ஹனிடிராப்' மூலம் பணம் பறிப்பு பெண் உட்பட 6 பேர் கைது
'ஹனிடிராப்' மூலம் பணம் பறிப்பு பெண் உட்பட 6 பேர் கைது
ADDED : செப் 05, 2025 04:49 AM

உடுப்பி:'ஹனி டிராப்' மூலம் இளைஞரிடம் பணம் கேட்டு மிரட்டிய பெண் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி., ஹரிராம் சங்கர் கூறியதாவது:
கேரள மாநிலத்தின் காசர்கோடுவை சேர்ந்தவர் சந்தீப் குமார். இவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு முகமது நாசிர் ஷெரிப், 36, என்பவர் அறிமுகமானார். இருவரும் நண்பர்களான பின், சில நாட்களில் அஸ்மா, 43, என்ற பெண்ணை சந்தீப்புக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அஸ்மா, பாலியல் தொழில் செய்து வருவதையும் சந்தீப் குமாரிடம் கூறி, மொபைல் போன் எண்ணையும் பெற்றுத்தந்துள்ளார்.
இருவரும் அவ்வப்போது பேசி வந்துள்ளனர். கடந்த 2ம் தேதி அஸ்மாவை சந்தீப் குமார் தொடர்பு கொண்டார். குந்தாபூருக்கு வரும்படி அஸ்மா தெரிவித்தார். இவரும் அங்கு சென்றார். அங்கிருந்து கோடேஸ்வருக்கு சென்றனர். அங்குள்ள வீடு ஒன்றிற்குள் இருவரும் சென்றனர். வீட்டிற்குள் முகமது நாசிர் ஷெரிப், சைபுல்லா, 38, அப்துல் சத்தார், 23, அப்துல் அசிஸ், 26, ஆகியோர் நுழைந்தனர். சந்தீப் குமாரை, இரும்பு ராடால் அடித்து மிரட்டினர்.
அவரது பாக்கெட்டில் இருந்த 6,000 ரூபாயை பறித்த அவர்கள், சந்தீப்பின் ஏ.டி.எம்., கார்டையும் அதன் பின் நம்பரையும் பெற்றுக் கொண்டார். ஏ.டி.ம்.,மில் இருந்து 40 ஆயிரம் எடுத்துக் கொண்டனர். பின், மீண்டும் அவரது மொபைல் போனில் இருந்து 'போன்பே' மூலம் 35,000 பரிமாற்றம் செய்து கொண்டனர்.
'இவ்விஷயத்தை வெளியே சொன்னால், கொலை செய்துவிடுவோம்' என மிரட்டி, அவரை அனுப்பி வைத்தனர்.
நேரே குந்தாபூர் டவுன் போலீஸ் நிலையத்துக்கு சென்ற சந்தீப், போலீசில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார் கோடேஸ்வரா கிராமத்தில் இருந்த ஜாவித், 28, அஸ்மா, சைபுல்லா, முகமது நாசிர் ஷெரிப், அப்துல் சத்தார், அப்துல் அசிஸ் ஆகிய ஆறு பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து இரு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில், நசிரும், அஸ்மாவும் இதுபோன்று மோசடி வழக்கில் ஏற்கனவே கைதாகி உள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.