/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விதிமுறையை மீறிய 6 பி.ஜி.,க்களுக்கு பூட்டு
/
விதிமுறையை மீறிய 6 பி.ஜி.,க்களுக்கு பூட்டு
ADDED : ஜன 17, 2026 06:28 AM
பெங்களூரு: பெங்களூரில் பல்வேறு இடங்களில் உள்ள பேயிங் கெஸ்ட் மையங்களில், அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். விதிமுறைகளை பின்பற்றாத பி.ஜி.,க்களுக்கு பூட்டு போட்டனர்.
பெங்களூரின் மத்திய மாநகராட்சி கமிஷனர் ராஜேந்திர சோழன் உத்தரவுபடி, சுகாதார பிரிவை சேர்ந்த சிவகுமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று பல இடங்களில் உள்ள பி.ஜி.,க்களில் சோதனை நடத்தினர். மொத்தமாக, 204 பி.ஜி.,க்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
சுத்தமான குடிநீர் உள்ளதா, கழிப்பறை, சமையல் அறைகள் துாய்மையாக, சுகாதாரமாக உள்ளதா, தரமான உணவு வழங்கப்படுகிறதா, பாதுகாப்புக்கான கண்காணிப்பு கேமராக்கள் செயல்படுகிறதா, தீயணைப்பு சாதனங்கள் உள்ளனவா என, ஆய்வு செய்தனர். அப்போது, பல பி.ஜி.,க்களில், அரசு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது தெரியவந்தது.
துாய்மை குறைபாடு உட்பட பல குளறுபடிகள் இருந்த ஆறு பி.ஜி.,க்களுக்கு, அதிகாரிகள் பூட்டு போட்டனர். ஏழு நாட்களுக்குள் இங்குள்ள பிரச்னைகளை சரி செய்து அறிக்கை அளித்தால், பி.ஜி.,க்கள் செயல்பட அனுமதி கிடைக்கும் என, அதன் உரிமையாளர்களை அறிவுறுத்தினர்.
சில குறைபாடுகள் இருந்த பி.ஜி.,க்களுக்கு கடுமையான அபராதமும் விதிக்கப்பட்டது.

