தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 6 வயது சிறுவன் மாரடைப்பால் திடீர் மரணம்

 6 வயது சிறுவன் மாரடைப்பால் திடீர் மரணம்

 6 வயது சிறுவன் மாரடைப்பால் திடீர் மரணம்


ADDED : ஜூன் 15, 2026 10:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2026 10:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஷிவமொக்கா: பள்ளி வளாகத்தில் விளையாடும் போது மயங்கிய ஆறு வயது சிறுவன் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பே, மாரடைப்பால் உயிரிழந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் திடீர் மாரடைப்பால், உயிரிழப்போர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. பல்வேறு மாவட்டங்களில், இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன. குறிப்பாக இளம் வயதில், பலரும் மாரடைப்புக்கு பலியாவது, சுகாதாரத்துறைக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இதற்கிடையே 6 வயது சிறுவனுக்கு, மாரடைப்பு ஏற்பட்டிருப்பது, அதிர்ச்சி அளித்துள்ளது.

ஷிவமொக்கா மாவட்டம், சாகரா தாலுகாவின் ஹாளசசி கிராமத்தில் வசிப்பவர் கவுதம். இவரது மனைவி ஷில்பா. இத்தம்பதியின் மகன் திரிலோக் ஜெயின், 6. இவர் கிராமத்தின் அரசு துவக்கப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். ஜூன் 13ம் தேதியன்று, வழக்கம் போன்று பள்ளிக்கு சென்றார். அன்று அரை நாள் மட்டுமே வகுப்பு இருந்தது. அதன்பின் பள்ளி வளாகத்தில் நண்பர்களுடன் விளையாடினார்.

அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்த பள்ளி ஆசிரியர்கள், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியில் சிறுவன் உயிரிழந்தார். அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிறுவனுக்கு ஏற்கனவே இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருந்திருக்கலாம் என, டாக்டர்கள் சந்தேகிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us