ADDED : மார் 12, 2026 05:44 AM

அ நிறம் | அளவு
பீதர்: குதிரை எட்டி உதைத்தில் முதியவர் உயிரிழந்தார்.
பீதர் மாவட்டம், மைலுாரில் உள்ள ஜம்மி காலனியை சேர்ந்தவர் வைஜ்யநாத், 60. தினக்கூலியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். வட்டசாலை அருகே செல்லும் போது, சாலை ஓரத்தில் இருந்த குதிரை ஒன்று திடீரென வைஜ்யநாத்தை எட்டி உதைத்தது.
கீழே விழுந்த அவரது தலையில் படுகாயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக பிரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், அவரின் உடல் நிலை மோசமடைந்ததால், ஹைதராபாத்துக்கு அழைத்து செல்லும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
ஆனால், ஹைதராபாத் செல்லும் வழியில் ஆம்புலன்சில் உயிரிழந்தார்.
