/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
60 வயது ஓய்வூதியம்: 12 லட்சம் பேர் மோசடி
/
60 வயது ஓய்வூதியம்: 12 லட்சம் பேர் மோசடி
ADDED : ஜூலை 24, 2025 04:52 AM

பெங்களூரு : கர்நாடகாவில் 60 வயதை பூர்த்தி அடையாமல் 11.80 லட்சம் பேர், முதியோர் ஓய்வூதியம் பெற்று வருவது தெரிய வந்துள்ளது.
கர்நாடக வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா, உத்தர கன்னடாவின் கார்வாரில் நேற்று அளித்த பேட்டி:
கர்நாடகாவில் 60 வயதை பூர்த்தி அடைவதற்கு முன்பே, பலர் முதியோர் ஓய்வூதியம் பெறுவதாக எங்கள் கவனத்திற்கு வந்தது. இதுகுறித்து விசாரித்தபோது 11.80 லட்சம் பேர் 60 வயதை பூர்த்தி அடைவதற்கு முன்பே, முதியவர் ஓய்வூதியம் பெறுவது தெரிய வந்துள்ளது. போலி சான்றிதழ், ஆவணம் தயாரித்து வயதில் மோசடி செய்துள்ளனர்.
உத்தர கன்னடா மாவட்டத்தில் மட்டும் வருமான வரி செலுத்தும் 351 பேர் உட்பட 11,956 பேர், முதியோர் ஓய்வூதியம் பெறுவதில் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.