தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/சபரிமலைக்கு 1,126 கி.மீ., நடந்தே சென்ற கர்நாடகாவை சேர்ந்த 63 வயது பெண்

சபரிமலைக்கு 1,126 கி.மீ., நடந்தே சென்ற கர்நாடகாவை சேர்ந்த 63 வயது பெண்

சபரிமலைக்கு 1,126 கி.மீ., நடந்தே சென்ற கர்நாடகாவை சேர்ந்த 63 வயது பெண்


UPDATED : நவ 23, 2026 12:00 AM

ADDED : நவ 22, 2026 08:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 12:00 AM ADDED : நவ 22, 2026 08:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

– நமது நிருபர் –

சாதிக்கும் மன உறுதியும், அசைக்க முடியாத கடவுள் பக்தியும் இருந்தால் வயது ஒரு தடையாக இருக்காது என்பதற்கு சாட்சியாக உள்ளார், பீமாபாய் ரேவப்பா சலமகி, 63. இவர், கர்நாடகாவின் பாகல்கோட்டில் இருந்து கேரளாவின் சபரிமலைக்கு, 1,126 கி.மீ., நடந்தே சென்று, தனது தெய்வ பக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

சபரிமலை அய்யப்ப சுவாமி மீது அளவு கடந்த பக்தி கொண்ட பீமாபாய், கடந்த 2023, 2024ம் ஆண்டும் சொந்த ஊரான ஊர் பாகல்கோட்டின் ஜமகண்டி தாலுகா, சாவலகி கிராமத்தில் இருந்து, சபரிமலைக்கு நடந்தே சென்றார். கடந்த ஆண்டு காலில் ஏற்பட்ட காயத்தால், அவர் சபரிமலைக்கு செல்லவில்லை.

இந்த ஆண்டு தனது ஆன்மிக பாதயாத்திரையை, கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி துவக்கினார். ஹூப்பள்ளி, கார்வார், முருடேஸ்வரா, உடுப்பி, மங்களூரு, கோழிக்கோடு, திருச்சூர், கோட்டயம் வழியாக 1,126 கி.மீ., நடந்தே சென்று, சபரிமலை கோழிக்காவு சோதனை சாவடியை நேற்று அடைந்துள்ளார்.

இன்று அல்லது நாளை அய்யப்பனை தரிசனம் செய்ய உள்ளார். தினமும் 20 முதல், 25 கி.மீ., நடந்தே சென்றுள்ளார். நீண்ட துார பயணம் என்பதால் பழங்களை மட்டுமே உணவாக உட்கொண்ட இவர், சோர்வு அடையாமல் இருக்க இளநீர், குளிர்பானங்களை குடித்துள்ளார். இரவில் கோவில்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஓய்வு எடுத்துள்ளார்.

கடந்த, 30 ஆண்டுகளாக ஆன்மிக தலங்களுக்கு பாதயாத்திரையாக செல்லும் பீமாபாய் மிக கடினமான, ஆன்மிக பயணமான நர்மதை நதிக்கரை யாத்திரையும் முடித்தவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us