தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மது அருந்தி வாகனம் ஓட்டிய 649 பேர் மீது வழக்குப்பதிவு

 மது அருந்தி வாகனம் ஓட்டிய 649 பேர் மீது வழக்குப்பதிவு

 மது அருந்தி வாகனம் ஓட்டிய 649 பேர் மீது வழக்குப்பதிவு


ADDED : ஜூன் 15, 2026 10:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2026 10:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரு போக்குவரத்து போலீசார் அறிக்கை:

பெங்களூரில் மது அருந்திவிட்டு சாலைகளில் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் வகையில், 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை போக்குவரத்து போலீசார் சோதனை நடத்தினர். 53 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சோதனை நடந்தது. 42,108 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.

இவற்றில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 649 பேரும், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 143 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களிடமிருந்து 1.44 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

இது போன்ற நடவடிக்கைகள் வரும் நாட்களிலும் தொடரும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us