போலீசார் அலட்சியத்தால் 66 ரவுடிகள் பெயர் நீக்கம்
போலீசார் அலட்சியத்தால் 66 ரவுடிகள் பெயர் நீக்கம்
ADDED : ஜூன் 16, 2026 06:22 AM
பெங்களூரு: போலீசார் அலட்சியத்தால், ' சைலன்ட்' சுனில், ரோகித் உட்பட 66 பேர், ரவுடிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
குற்றச்சம்பவங்க ளில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் பெயரை ரவுடி பட்டியலில் சேர்ப்பதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட நபர் செய்த குற்றங்கள் குறித்த தகவல்களை சேகரிக்க வேண்டும்; ரவுடி பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் நபருக்கு அது தொடர்பான அறிவிப்பை வழங்க வேண்டும் என்பது உட்பட பல வழிகாட்டுதல்களை, உச்ச நீதிமன்றம் வெளியிட்டு உள்ளது.
ஆனால், இந்த வழிகாட்டுதல்படி செயல்படாமல் தங்கள் பெயர்களை ரவுடி பட்டியலில் சேர்த்ததாக கூறி, பிரபல ரவுடிகள் சைலன்ட் சுனில், ரோகித் உட்பட 66 பேர், கர்நாடக உள்துறையின் புகார்கள் ஆணையத்தில் மனு அளித்தனர். தங்கள் பெயர்களை ரவுடி பட்டியலில் இருந்து கைவிடும்படியும் கோரிக்கை வைத்தனர்.
இந்த மனுக்களை பரிசீலனை செய்த போது, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை போலீசார் மீறியது தெரியவந்தது. இதனால் சைலன்ட் சுனில், ரோகித் உட்பட 66 பேரின் பெயர்களை ரவுடி பட்டியலில் இருந்து நீக்கி, புகார்கள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ரவுடிகளை கட்டுப்படுத்த, ரவுடிகள் ஒழிப்பு படையை அமைக்க வேண்டும் என்று முதல்வர் சிவகுமார் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நிலையில், போலீசார் அலட்சியத்தால் 66 ரவுடிகள் பெயர் பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
