ADDED : ஜூன் 16, 2026 06:22 AM
பெங்களூரு: 'பணிக்கு சரியான நேரத்தில் வர வேண்டும்' என்ற முதல்வர் சிவகுமாரின் உத்தரவை, விதான் சவுதா அலுவலக ஊழியர்கள் கடைப்பிடிக்கவில்லை.
கர்நாடக முதல்வராக சிவகுமார் பொறுப்பேற்றதும், விதான் சவுதாவில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் காலை 10:00 மணிக்கு பணிக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஆனாலும் விதான் சவுதா அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் யாரும் காலை 10:00 மணிக்கு வருவது இல்லை. முதல்வர் உத்தரவை கடைப்பிடிக்கவில்லை.
காலை 11:00 மணிக்கு மேல் தான் அதிகாரிகள் வருகின்றனர்; சில ஊழியர்கள் காலை 10:30 மணிக்கு வருகின்றனர்.
அதிகாரிகளிடம் கேட்டால், அலுவல் பணியாக வெளியே சென்று வந்ததால், தாமதம் ஆவதாக கூறுகின்றனர். கீழ்நிலை ஊழியர்களிடம் கேட்டால் பதிலே இல்லை. இதற்கு முதல்வர் என்ன முடிவு எடுப்பார் என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
