ரேணுகாசாமி கொலை வழக்கில் இனி வாரத்தில் 4 நாள் விசாரணை
ரேணுகாசாமி கொலை வழக்கில் இனி வாரத்தில் 4 நாள் விசாரணை
ADDED : ஜூன் 16, 2026 06:22 AM
பெங்களூரு: ''சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கும் வகையில், இனி வாரத்தில் நான்கு நாட்கள் விசாரணை நடக்க உள்ளது.
சித்ரதுர்காவின் ரேணுகாசாமியை கொலை செய்த வழக்கில், நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா உட்பட 17 பேர் சிறையில் உள்ளனர்.
இந்த வழக்கு தற்போது பெங்களூரு 59வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நடக்கிறது. நீதிபதி சுஜாதா மடிவாளப்பா விசாரிக்கிறார். நேற்று நடந்த விசாரணையின் போது தர்ஷன் உள்ளிட்டோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
தர்ஷன் தரப்பில் ஆஜரான வக்கீல், சாட்சிகளின் விசாரணையை ஒத்திவைக்க கோரி மனு செய்தார். இம்மனுவை நீதிபதி நிராகரித்தார்.
உச்ச நீதிமன்றம் வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட்டு உள்ளதால், இனி வாரத்தில் திங்கள் முதல் வியாழன் வரை நான்கு நாட்கள் தினமும் விசாரணை நடக்கும் என்று அறிவித்தார்.
