/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பேராசிரியர் வீட்டில் ரூ.1.50 கோடி கொள்ளையடித்த 7 பேர் கைது
/
பேராசிரியர் வீட்டில் ரூ.1.50 கோடி கொள்ளையடித்த 7 பேர் கைது
பேராசிரியர் வீட்டில் ரூ.1.50 கோடி கொள்ளையடித்த 7 பேர் கைது
பேராசிரியர் வீட்டில் ரூ.1.50 கோடி கொள்ளையடித்த 7 பேர் கைது
ADDED : அக் 11, 2025 11:04 PM

எலஹங்கா: ஊழல் தடுப்பு படையினர் என்று கூறி, பேராசிரியர் வீட்டிற்குள் புகுந்து 1.50 கோடி ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்த, முன்னாள் கார் டிரைவர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் நேற்று அளித்த பேட்டி:
எலஹங்கா விநாயக் நகரில் வசிப்பவர் கிரிராஜ். தனியார் கல்லுாரியில் மூத்த பேராசிரியர். கடந்த மாதம் 19ம் தேதி காலையில் கிரிராஜ் வெளியே சென்றிருந்தார். வீட்டில் அவரது மனைவியும், தாயும் இருந்தனர்.
திடீரென வீட்டிற்குள் புகுந்த நான்கு பேர், தங்களை ஊழல் தடுப்பு படையினர் என்று கூறினர். வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என்று கூறி, ஒவ்வொரு அறையிலும் சோதனை நடத்தினர்.
பீரோ, வீட்டின் ஒரு அறையில் லாக்கரில் இருந்த நகை, பணத்தை எடுத்தனர். பெரிய சூட்கேசில் போட்டனர். வெளியே எடுத்து வந்து காரில் வைத்து அங்கிருந்து தப்பினர். வெளியே சென்றிருந்த கிரிராஜ் வீட்டிற்கு வந்தபோது, ஊழல் தடுப்புப் படையினர் என்று கூறி மர்மநபர்கள், 1.50 கோடி ரூபாய் ரொக்கம், 50 கிராம் நகைகள் எடுத்துச் சென்றது சென்றது தெரிந்தது. எலஹங்கா போலீசில் புகார் செய்தார். சிலர் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறினார்.
கிரிராஜ் கொடுத்த தகவலின்படி, அவரது முன்னாள் கார் டிரைவரான தொம்மலுாரின் சங்கர், 48, என்பவரை பிடித்து, போலீசார் விசாரித்தனர். தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, கிரிராஜ் வீட்டில் கொள்ளை அடித்ததை ஒப்புக் கொண்டார்; அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் கொடுத்த தகவல் அடிப்படையில், பெங்களூரு ஆர்.எம்.வி., 2வது ஸ்டேஜின் ராஜேந்திர ஜெயின், 42, விஜயநகர் சோலுார்பாளையாவின் சீனிவாசன், 44, ஸ்ரீநகரின் கிரண்குமார், 51, ஸ்ரீராமபுரத்தின் ஹேமந்த் குமார், 42, ராமமூர்த்திநகரின் சங்கரப்பா, 48, தெலுங்கானா ஐதராபாத்தின் மோகன் என்ற ஜனார்த்தன், 54, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து 1.27 கோடி ரூபாய் ரொக்கம், 50 கிராம் நகைகள், இரண்டு கார்கள், கிரிராஜ் வீட்டில் இருந்து எடுத்துச் சென்ற, சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கொள்ளைக்கு திட்டம் தீட்டி கொடுத்ததே சங்கர் தான்.
கொள்ளையடிக்க சென்றபோது அவர் செல்லவில்லை; மற்ற ஆறு பேரும் சென்றனர். நான்கு பேர் வீட்டிற்குள் சென்றனர்; இருவர் வெளியே நின்று கண்காணித்தனர். எளிதில் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசையில், ஆறு பேரும் திட்டம் தீட்டி கொள்ளை அடித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மீட்கப்பட்ட பணம், நகைகளை கமிஷனர் சீமந்த்குமார் சிங் பார்வையிட்டார்.