/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்தவர் கைது
/
தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்தவர் கைது
தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்தவர் கைது
தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்தவர் கைது
ADDED : அக் 11, 2025 11:05 PM
மங்களூரு: தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.
பி.எப்.ஐ., எனும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பை மத்திய அரசு 2022ம் ஆண்டில் தடை செய்தது. இந்த அமைப்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது, நிதி திரட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், தட்சிண கன்னடா கடபா தாலுகா ராமகுஞ்சா கிராமத்தை சேர்ந்த சையத் இப்ராஹிம் தங்கல், 55, 'வாட்ஸாப்' குழுக்கள் மூலம் பி.எப்.ஐ., அமைப்புக்கு ஆதரவாக பிரசாரமும், நிதி திரட்டியும் வந்துள்ளார்.
இதையறிந்த மங்களூரு வடக்கு போலீசார், நேற்று முன்தினம் இப்ராஹிமை மங்களூரு நகரின் கடைவீதியில் கைது செய்தனர். அவரது மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து, மங்களூரு வடக்கு போலீஸ் நிலையத்தில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின், அந்நபரை பெங்களூரில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். வரும் 24ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள், விரைவில் கைது செய்யப்படுவர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.