ADDED : டிச 08, 2025 05:48 AM
சாம்ராஜ்நகர்: நடந்து சென்றவர்களை வெறி நாய் கடித்து குதறியதில், ஏழு பேர் காயம் அடைந்தனர்.
சாம்ராஜ்நகர் மாவட்டம், எலந்துார் தாலுகாவின், கனரா வங்கி அருகில் உள்ள பஸ் நிலையத்தில், நேற்று காலை எலந்துாரின் சவுடம்மா, ஒய்.கே.மோளே கிராமத்தின் லட்சுமம்மா, கே.தேவரஹள்ளி கிராமத்தின் ரத்னம்மா உட்பட பலர் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த வெறி நாய், அவர்கள் பாய்ந்து கடித்தது.
சாலையில் நடந்து சென்றவர்களையும் விரட்டி, விரட்டி கடித்தது. இதில் ஏழு பேர் கை, கால்களில் பலத்த காயம் அடைந்தனர். இதை கவனித்த அப்பகுதியினர், நாயை விரட்டி விட்டு, காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் பலர் முதியவர்கள் ஆவர்.
இச்சம்பவத்தால், பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர். சம்பவம் நடந்த சுற்றுப்பகுதிகளில் வெறிநாய் நடமாடுவதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். நாயை பிடித்து செல்லும்படி, உள்ளாட்சி நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

