தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கள்ள நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்ட 7 பேர் கைது

கள்ள நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்ட 7 பேர் கைது

கள்ள நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்ட 7 பேர் கைது


UPDATED : அக் 02, 2026 12:07 AM

ADDED : அக் 02, 2026 12:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:07 AM ADDED : அக் 02, 2026 12:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாம்ராஜ்பேட்: தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் கள்ள நோட்டுகளை அச்சடித்து, கர்நாடகாவின் பெங்களூரில் புழக்கத்தில் விட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு சாம்ராஜ்பேட் போலீசார் கடந்த மாதம் 27ம் தேதி மைசூரு சாலையில் ரோந்து சென்ற போது, நாயண்டஹள்ளி பகுதியில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட, தெலுங்கானாவின் கிருஷ்ணா, பர்கத் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், தெலுங்கானா, தமிழகத்தை சேர்ந்த கும்பல், தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அந்த வீட்டில் கள்ள நோட்டுகளை தயாரித்து, பெங்களூருக்கு எடுத்து வந்து புழக்கத்தில் விட்டது தெரிந்தது.

கைதான இருவரும் கொடுத்த தகவலின்படி, தெலுங்கானா, தமிழகத்தை சேர்ந்த சத்யா, முருகேஷ், கோவிந்தன், சரவணன், லட்சுமணன் என, மேலும் 5 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ஆறு லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஒட்டுமொத்தமாக, 21 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள், அச்சு இயந்திரங்கள், மடிக்கணினிகள், உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 7 பேர் கைதாகி உள்ளனர். மேலும் நான்கு பேரை தேடி வருகிறோம் என்று, மேற்கு மண்டல டி.சி.பி., யதீஷ் நேற்று தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us