தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/குழந்தைகளுக்கு பிடித்த முட்டை பிரட் உப்புமா

குழந்தைகளுக்கு பிடித்த முட்டை பிரட் உப்புமா

குழந்தைகளுக்கு பிடித்த முட்டை பிரட் உப்புமா


UPDATED : அக் 03, 2026 12:00 AM

ADDED : அக் 02, 2026 09:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:00 AM ADDED : அக் 02, 2026 09:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

– நமது நிருபர் –

காலை சிற்றுண்டிக்கோ அல்லது மாலை டீயுடன், வித்தியாசமான சிற்றுண்டி சாப்பிட விரும்புகிறீர்களா. முட்டை பிரட் உப்புமா செய்யுங்கள். அவசரத்தில் செய்யக்கூடிய எளிதான சிற்றுண்டியாகும்.

செய்முறை:



முதலில் பிரட்டின் ஓரங்களை நீக்கி விட்டு, சிறு, சிறு துண்டுகளாக நறுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி, காய்ந்ததும் பிரட் துண்டுகளை போடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வையுங்கள்.

அதன்பின் அதே வாணலியில், எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் சிறிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு சில நிமிடங்கள் வதக்கவும்.

அதன்பின் நறுக்கிய தக்காளி, மஞ்சள் துாள், தனியா துாள், சீரக துாள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். ஒரு சிறிய கிண்ணத்தில், முட்டைகளை உடைத்து ஊற்றி, நன்றாக அடித்து கொள்ளவும். தக்காளி, வெங்காய மசாலாவில், வறுத்து வைத்துள்ள பிரட் துண்டுகளை போடவும். அதன் மீது முட்டை கலவையை ஊற்றி, கை விடாமல் கிளறவும்.

முட்டை முழுதாக வெந்த பின், எலுமிச்சை சாறு, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தழையை துாவினால், சுவையான முட்டை பிரட் உப்புமா தயார். சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும். குட்டீஸ்கள் விரும்பி சாப்பிடுவர். வீட்டுக்கு திடீர் விருந்தாளி வந்தால், சில நிமிடங்களில் தயாரித்து கொடுத்து அசத்தலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us