/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
துங்கபத்ரா அணையில் 7 மதகுகள் சேதம்? 33 கேட்களையும் மாற்ற பா.ஜ., வலியுறுத்தல்
/
துங்கபத்ரா அணையில் 7 மதகுகள் சேதம்? 33 கேட்களையும் மாற்ற பா.ஜ., வலியுறுத்தல்
துங்கபத்ரா அணையில் 7 மதகுகள் சேதம்? 33 கேட்களையும் மாற்ற பா.ஜ., வலியுறுத்தல்
துங்கபத்ரா அணையில் 7 மதகுகள் சேதம்? 33 கேட்களையும் மாற்ற பா.ஜ., வலியுறுத்தல்
ADDED : ஆக 19, 2025 07:54 AM

பெங்களூரு : விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட்டில் உள்ள துங்கபத்ரா அணையின் ஏழு மதகுகள் சேதமடைந்ததாக, அமைச்சர் சிவராஜ் தங்கடகி கூறியது, விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ''அணையின் 33 மதகுகளையும் மாற்ற வேண்டும்,'' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா வலியுறுத்தி உள்ளார்.
இரவு பகல் விஜயநகரா மாவட்டம், ஹொஸ் பேட்டில் துங்கபத்ரா அணை உள்ளது. கடந்தாண்டு 19வது மதகு உடைந்து, தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. பல நாட்கள் இரவு பகலாக பணியாற்றி, புதிய மதகு பொருத்தப்பட்டது. அதேவேளையில், மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளின் மதகுகளையும் சீரமைக்கும்படி விவசாயிகள், எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.
சமீபத்தில் பேட்டியளித்த கன்னடம், கலாசாரத் துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி, ''துங்கபத்ரா அணையின் ஏழு மதகுகள் வளைந்திருப்பதால், அதை மேலே துாக்க முடியவில்லை,'' என கூறியிருந்தார்.
இது மாவட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நிபுணர் குழுவினர், மதகை ஆய்வு செய்து வருகின்றனர்.
துங்கபத்ரா அணை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், 'துங்கபத்ரா அணைக்கு வந்துள்ள நிபுணர்கள், வழக்கமான ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய தண்ணீர் கமிஷன் உத்தரவின்படி, 33 மதகுகளை ஆய்வு செய்கின்றனர். எனவே, யாரும் பயப்பட தேவையில்லை. இதற்கு மாற்று ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும்' என்றனர்.
ஆனால், தற்போது அணைக்கு, 64,081 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதேவேளையில், அணையில் இருந்து 86,631 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் காம்ப்ளி, கங்காவதி, சிருகுப்பா பகுதி களில் 4,942 ஏக்கர் நெல் பயிர் நீரில் மூழ்கி உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா நேற்று அளித்த பேட்டி:
பா.ஜ., கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் துங்கபத்ரா அணையின் மதகு உடைந்து ஆயிரக்கணக்கான கன அடி தண்ணீர் வீணானது. இதற்கு நிரந்தர தீர்வு காண தாமதம் செய்வதால், அணையில் உள்ள நீரின் அழுத்தம், மற்ற மதகுகளின் மீது விழுந்துள்ளது. , அணையின் 33 மதகுகளையும் உடனடியாக மாற்ற வேண்டும்.
கொப்பால், ராய்ச்சூர், பல்லாரி மாவட்ட விவசாயிகள், இந்த அணை நீரை நம்பி, ஆண்டுதோறும் இரண்டு முறை சாகுபடி செய்து வந்தனர்.
இது குறித்து மாநில அரசோ அல்லது சம்பந்தப்பட்ட துறை அமைச்சரோ விவாதிக்கவில்லை. அதற்கு பதிலாக, துங்கபத்ரா அணை நீர்த்தேக்க வாரியம் மீது பழியை சுமத்தி உள்ளனர். இதன் விளைவாக, இந்தாண்டு ஒரு முறை மட்டுமே பயிரிடும் சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு கூறினார்.