தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஊர்வலத்தில் புகுந்த கார் 7 வயது சிறுமி பலி

 ஊர்வலத்தில் புகுந்த கார் 7 வயது சிறுமி பலி

 ஊர்வலத்தில் புகுந்த கார் 7 வயது சிறுமி பலி


ADDED : ஏப் 16, 2026 03:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 03:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிக்கமகளூரு: சிக்கமகளூரு தாலுகாவின் பிலேகல்லு கிராமத்தில் நேற்று முன்தினம் அம்பேத்கர் ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. அப்போது வேகமாக வந்த ஒரு கார், கூட்டத்திற்குள் புகுந்தது. இதில், அதே கிராமத்தை சேர்ந்த சான்வி, 7, உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த நிஷ்த், திருப்தி, திம்மராஜு, உஷா, சேத்தன், சிருஷ்டி, நாகராஜ் ஆகியோர் ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முன்னதாக விபத்து நடந்ததும், கார் ஓட்டுநர் சுதாகரை மக்கள் பிடித்து சரமாரியாக தாக்கினர். காரில் இருந்த மற்றொரு நபர், அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ஓட்டுநரை தனியார் மருத்துவமனையில் சேர்க்க முயற்சித்தனர். இதற்கு கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சிக்கமகளூரு கிராமப்புற போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us