தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பசுவை வதம் செய்தால் 7 ஆண்டு சிறை பெங்., மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

 பசுவை வதம் செய்தால் 7 ஆண்டு சிறை பெங்., மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

 பசுவை வதம் செய்தால் 7 ஆண்டு சிறை பெங்., மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை


ADDED : மே 06, 2026 11:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2026 11:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''பசுவதை செய்தால் ஏழு ஆண்டு சிறை தண்டனை, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்,'' என பெங்களூரு நகர் மாவட்ட கலெக்டர் ஜெகதீஷ் எச்சரித்தார்.

பக்ரித் பண்டிகை நேரத்தில், பசுக்கள் மற்றும் ஒட்டகங்களை கடத்தப்படுவதை தடுப்பது குறித்து, பெங்களூரு நகர் மாவட்ட கலெக்டர் ஜெகதீஷ் தலைமையில், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

அவர் பேசியதாவது:

வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து பசுக்களை கடத்தி வருவோர், மைசூரு சாலை, துமகூரு சாலை, மாகடி சாலை, ஓசூர் சாலை, பழைய மெட்ராஸ் சாலை உட்பட, 10 சாலை வழியாக, பெங்களூருக்குள் நுழைகின்றனர். இந்த சாலைகளில் செக்போஸ்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு போக்குவரத்து மற்றும் போலீஸ் துறை அதிகாரிகள், மூன்று ஷிப்டுகளில் பணியாற்றுவர்.

சட்டவிரோதமாக விலங்குகளை கடத்தி வருவது தெரிந்தால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

விலங்குகள் கோசாலைக்கு அனுப்பப்படும் பெங்களூரில் எங்கேயாவது சட்டவிரோதமாக ஒட்டகம், பசுக்கள் கொல்லப்படுவது தெரிந்தால் உடனடியாக பெங்களூரு மாநகராட்சி உதவி எண் 1533ல் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.

பசுவதை செய்தால் ஏழு ஆண்டு சிறை தண்டனை, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். விலங்குகள் வதை செய்வது குற்றம் என்பது குறித்து, துண்டு பிரசுரங்கள் வினியோகித்தும், ஆட்டோக்களில் ஒலி பெருக்கி வழியாகவும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பண்டிகை நேரத்தில் விலங்குகளை பலியிடுவதால், உருவாகும் கழிவுகளை பொது இடங்கள் உட்பட கண்ட இடங்களில் கொட்ட கூடாது. இத்தகைய கழிவை விதிமுறைப்படி அப்புறப்படுத்த, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us