ADDED : ஆக 15, 2025 05:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைசூரு: ஸ்ரீசாமுண்டி வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு முகாமில் இருந்த 71 வயது பத்மாவதி யானை, நேற்று உயிரிழந்தது.
கர்நாடகாவில், 1973ல் பிடிக்கப்பட்ட பத்மாவதி யானை, மைசூரு மிருகக்காட்சி சாலையில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொது மக்கள், குழந்தைகளை ஈர்த்தது. இந்த யானை, 1979ல் கஜலட்சுமி, 1996ல் கேமலா, 2004ல் அபிமன்யு ஆகிய மூன்று யானைகளை ஈன்றது. இதில் கஜலட்சுமி யானை, மைசூரு தசராவில் பங்கேற்கிறது.
வயது மூப்பால், நேற்று முன்தினம் பத்மாவதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை, 5:10 மணியளவில் உயிரிழந்தது.