/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தசரா யானைகளுக்கு தினமும் 750 கிலோ ஊட்டச்சத்து உணவு
/
தசரா யானைகளுக்கு தினமும் 750 கிலோ ஊட்டச்சத்து உணவு
தசரா யானைகளுக்கு தினமும் 750 கிலோ ஊட்டச்சத்து உணவு
தசரா யானைகளுக்கு தினமும் 750 கிலோ ஊட்டச்சத்து உணவு
ADDED : ஆக 18, 2025 03:02 AM

மைசூரு : தசராவுக்கு வந்துள்ள ஒரு யானைக்கு, தினமும் 600 முதல் 750 கிலோ வரையிலான சத்தான உணவு வழங்கப்பட்டு வருகின்றன.
மைசூரு தசரா விழாவில் பங்கேற்க, முதல் கட்டமாக அபிமன்யு தலைமையில் ஒன்பது யானைகள் அரண்மனைக்கு வருகை தந்து உள்ளன. வனப்பகுதியில் கிடைத்த உணவுகளை சாப்பிட்டு வந்த யானைகளுக்கு, கடந்த 15ம் தேதி வரை அதே உணவுகள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது அதன் எடையை அதிகரிக்கும் வகையில், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் வழங்கும் பணி நேற்று முன்தினம் துவங்கியது.
750 கிலோ இது குறித்து மைசூரு வனவிலங்கு பிரிவு துணை வன அதிகாரி பிரபு கவுடா கூறியதாவது:
வனப்பகுதியில் இருந்து வந்துள்ள யானைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்க துவங்கி உள்ளோம்.
ஒவ்வொரு யானைக்கும் தினமும் 450 முதல் 500 கிலோ ஆலமர இலைகள், 175 முதல் 200 கிலோ புதிய புற்கள், 20 கிலோ புழுங்கல் அரிசி, 35 முதல் 40 கிலோ வைக்கோலுடன் அரிசி; பச்சை பயிறு, கொள்ளு, உளுந்து, அரிசி, உப்பு மற்றும் பல்வேறு வகையான காய்கறிகள் அடங்கிய 10 முதல் 12 கிலோ வரை ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட தீவனமும் வழங்கப்படுகின்றன.
ஆண் யானைகள் தங்கள் பலத்தை அதிகரிக்க, நாள் ஒன்றுக்கு 75 0 கிலோ உணவும்; பெண் யானைகள் 600 கிலோ உணவு வழங்கப்படுகின்றன.
உடல் பருமன் அடைவதை தடுக்க, இந்த கலவை உணவை தினமும் உட்கொள்ள வேண்டும். கரும்பு, தேங்காயும் வழங்கப்படுகின்றன. தினசரி 10 முதல் 12 கி.மீ., நடைபயிற்சி மூலம் போதுமான ஊட்டச்சத்து வழங்கப்படுகிறது.
ஜீரணிக்க... இந்தாண்டு யானைகளுக்கு வழங்கப்படும் உணவில் வெண்ணெய், கோதுமை சேர்க்கப்படவில்லை. இந்த உணவுகளை சாப்பிட்ட யானைகளுக்கு ஊட்டச்சத்து குறைந்தது; கோதுமை சாப்பிட்ட யானைகளுக்கு செரிமானம் ஏற்படவில்லை. எனவே செரிமானத்தை எளிதாக்கும் கொள்ளு, கேழ்வரகு களி சேர்க்கப்பட்டு உள்ளன. தசரா முடியும் வரை இந்த உணவு 'மெனு' தொடரும்.
யானைக்கு வழங்கப்படும் உணவுகள், உயர்தர பொருட்களில் மட்டுமே செய்யப்படுகின்றன. தினமும் அரண்மனையில் இருந்து பன்னிமண்டபம் வரை நடக்கும் யானைகளின் தலை, கால்கள், கயிறுகளால் உடலில் ஏற்படும் சிராய்ப்புகளை தடுக்க 200 லிட்டர் ஆமணக்கு, வேப்பம், புங்கை எண்ணெ யும்; குளிர்ச்சி, பாதுகாப்புக்காக யானையின் கால்கள், மூட்டுகளில் வேப்ப எண்ணெய் மட்டும் தடவப்படுகிறது.
இவ்வாறு கூறினார்.
18_DMR_0007, 18_DMR_0008
யானைகளுக்கு வழங்க தயாரான ஊட்டச்சத்து உணவுகள். (அடுத்த படம்) உணவை மைசூரு வனவிலங்கு பிரிவு துணை வன அதிகாரி பிரபு கவுடா ஆய்வு செய்து யானைக்கு ஊட்ட தயாரானார்.