/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கள்ள சந்தையில் ஐ.பி.எல்., டிக்கெட்டை விற்ற 8 பேர் கைது
/
கள்ள சந்தையில் ஐ.பி.எல்., டிக்கெட்டை விற்ற 8 பேர் கைது
கள்ள சந்தையில் ஐ.பி.எல்., டிக்கெட்டை விற்ற 8 பேர் கைது
கள்ள சந்தையில் ஐ.பி.எல்., டிக்கெட்டை விற்ற 8 பேர் கைது
ADDED : ஏப் 13, 2025 07:20 AM
பெங்களூரு : ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை, கள்ள சந்தையில் விற்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவின் பல நகரங்களில் 18வது ஐ.பி.எல்., எனும் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டிகளை மையமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது; கள்ள சந்தையில் டிக்கெட் விற்பதும் நடக்கிறது.
கடந்த 10ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டில்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி துவங்குவதற்கு முன்பு, மைதானத்தை சுற்றி ஒரு கும்பல் கள்ள சந்தையில் டிக்கெட் விற்பதாக, சி.சி.பி., போலீசாருக்கு தகவல் வந்தது.
அங்கு சென்ற போலீசார் மைதானத்தில் 2, 10, 14, 21ம் நுழைவுவாயில் பகுதியில், கள்ள சந்தையில் டிக்கெட் விற்ற ஹேமந்த் குமார், 34, சாய் பிரசாத், 19, பாரத், 19, நரேந்திர குமார், 63, சிவராஜ்குமார், 32, மஞ்சுநாத், 43, சந்தோஷ், 28, மனோஜ், 28, ஆகிய 8 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 1,200 ரூபாய்; 5,000 ரூபாய்; 13,000 ரூபாய் மதிப்பிலான 18 டிக்கெட்டுகள்; எட்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதானவர்களில் இருவர் மைதானத்தில் உள்ள கேன்டீன் ஊழியர்கள் ஆவர். இதனால் கள்ள சந்தையில் டிக்கெட் விற்பனை செய்வதில், கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் உறுப்பினர்கள் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

