/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடகாவை சேர்ந்த 8 பேருக்கு பத்ம விருது
/
கர்நாடகாவை சேர்ந்த 8 பேருக்கு பத்ம விருது
ADDED : ஜன 26, 2026 05:16 AM

பெங்களூரு: கர்நாடகாவை சேர்ந்த எட்டு பேருக்கு 2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2026ம் ஆண்டிற்கான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்தவிருதுகள் பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதில், கர்நாடகாவை சேர்ந்த எட்டு பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டோர் விபரம்:
மாண்டியாவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அன்கே கவுடா.
தாணகெரேவை சேர்ந்த மருத்துவர் சுரேஷ் ஹனகவதி.
பெங்களூரை சேர்ந்தசமூக செயற்பாட்டாளர் எஸ்.ஜி.சுசீலம்மா.
பெலகாவியை சேர்ந்த கல்வியாளர் பிரபாகர் பசவபிரபு கொரே.
தொழிலதிபர் டி.டி.ஜெகநாதன்.
விஞ்ஞானி சுபா வெங்கடேஷா ஐயங்கார்.
கல்வியாளர் சசி சேகர் வேம்பட்டி.
பத்ம பூஷன் விருது வாங்கியவர்:
கோலாரை சேர்ந்த இசை கலைஞர் ஷதாவதனி ஆர்.கணேஷ்.

