தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மசூதி முன் பட்டாசு வெடித்ததால் தகராறு இரு சமூகத்தினர் மோதலில் 8 பேருக்கு வெட்டு

 மசூதி முன் பட்டாசு வெடித்ததால் தகராறு இரு சமூகத்தினர் மோதலில் 8 பேருக்கு வெட்டு

 மசூதி முன் பட்டாசு வெடித்ததால் தகராறு இரு சமூகத்தினர் மோதலில் 8 பேருக்கு வெட்டு


ADDED : ஜூலை 01, 2026 08:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 08:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஹாவேரி: மசூதி முன் பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட தகராறில், இரு சமூகத்தினர் இடையில் ஏற்பட்ட மோதலில், எட்டு பேருக்கு வெட்டு காயம் விழுந்தது.

ஹாவேரியின் ஹனகல் தாலுகா நரேகல் கிராமத்தில், விவசாய பாரம்பரிய திருவிழாவான, முழு நிலவு நாள் நேற்று முன்தினம் இரவு கொண்டாடப்பட்டது.

கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள், தாங்கள் வளர்க்கும் மாடுகள், கன்றுக்குட்டிகளை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து சென்றனர். அப்போது பட்டாசு வெடித்து விவசாயிகள் கொண்டாடினர்.

அப்போது, கிராமத்தில் உள்ள மசூதியின் முன், லோகித் குருபர் என்ற விவசாயி பட்டாசு வெடித்தார். இதற்கு காஜா கவுண்டி என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இந்த நேரத்தில் அங்கு வந்த காஜா கவுண்டியின் தந்தை பாஷாசாப் கவுண்டி, லோகித்தை அரிவாளால் தாக்கினார்.

இதுபற்றி அறிந்த லோகித்தின் உறவினர்கள் காஜா, பாஷாசாப்பை அரிவாளால் தாக்கினர். இதனால் இரு சமூகத்தினர் இடையில் மோதல் ஏற்பட்டது. அரிவாளால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

இந்த மோதலில் லோகித், அவரது உறவினர்கள் சிவராஜ், நாகப்பா, ஜெயப்பா, நிங்கராஜ், மல்லப்பா மற்றும் காஜா, பாஷாசாப்பிற்கு அரிவாளால் வெட்டு விழுந்தது. இவர்கள் அனைவரும், சிகிச்சைக்காக ஹாவேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மூன்று பேர், மேல்சிகிச்சைக்காக ஹூப்பள்ளி கிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சம்பவம் பற்றி அறிந்ததும் ஹாவேரி எஸ்.பி., யசோதா வந்தகோடி தலைமையிலான போலீசார் நரேகல் கிராமத்தில் குவிந்தனர். முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கிராமத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில், மோதலில் ஈடுபட்ட இரு சமூகத்தின், 26 பேர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது. தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தேடுகின்றனர்.

இந்த மோதல் சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஓட்டு வங்கிக்காக ஒரு சமூகம் செய்யும் செயல்களை காங்கிரஸ் அரசு கண்டுகொள்வது இல்லை என்றும், ஹிந்துக்கள் பண்டிகையை சீர்குலைக்க சதி நடப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us