தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஏழாவது உலக திருக்குறள் மாநாடு பெங்களூரில் 'லோகோ' வெளியீடு

 ஏழாவது உலக திருக்குறள் மாநாடு பெங்களூரில் 'லோகோ' வெளியீடு

 ஏழாவது உலக திருக்குறள் மாநாடு பெங்களூரில் 'லோகோ' வெளியீடு


ADDED : ஜூலை 01, 2026 08:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 08:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில் நடக்கவுள்ள, ஏழாவது உலக திருக்குறள் மாநாட்டிற்கான, 'லோகோ' நேற்று வெளியிடப்பட்டது.

பெங்களூரு புனித ஜோசப் பல்கலைக்கழகம், பெங்களூரு திருவள்ளுவர் சங்கம், தாய் மொழி கூட்டமைப்பு இணைந்து ஏழாவது உலக திருக்குறள் மாநாட்டை, பெங்களூரு புனித ஜோசப் பல்கலைக்கழகத்தில் வரும், 5ம் தேதி நடத்துகின்றன.

'லோகோ' இம்மாநாட்டிற்கான லோகோவை பல்கலைக் கழக துணைவேந்தர் விக்டர் லோபோ நேற்று வெளியிட்டார். பெங்., திருவள்ளுவர் சங்க தலைவரும், தாய்மொழி கூட்டமைப்பு தலைவருமான எஸ்.டி.குமார் பெற்று கொண்டார்.

பின், அவர் பேசிய தாவது:

புனித ஜோசப் பல்கலைக்கழகத்துடன் பெங்களூரு திருவள்ளுவர் சங்கம், கர்நாடகா தாய்மொழி கூட்டமைப்பும் இணைந்து மாநாட்டை நடத்துகின்றன.

மாநாட்டின் துவக்க விழாவில் தமிழகத்தின் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு, 'இஸ்ரோ' முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

தமிழகம், கர்நாடகாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் பங்கேற்க உள்ளனர். கன்னடத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை கர்நாடக ரக் ஷன வேதிகே அமைப்பு தலைவர் நாராயண கவுடா வெளியிடுகிறார்.

திருக்குறள் சேர, சோழ, பாண்டியர் அரங்கத்தில் 60க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை தமிழ் பேராசிரியர்கள் சமர்ப்பிக்க உள்ளனர். பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட திருக் குறள், கண்ணாடி பேழையில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

மாநாட்டில் கலந்து கொள்ளும் பேராசிரியர்கள், தமிழறிஞர்கள், கர்நாடகா மற்றும் தமிழகத்தில் உள்ள தமிழ் சங்கத்தினர் கவுரவிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக டீன்கள் அருள்மணி, கிறிஸ்டோ வி.செல்வம், பேராசிரியை சரளா ஆறுமுகம், முனைவர் மெய் சித்ரா, பெங்களூரு திருவள்ளுவர் சங்க செயலர் பிரபாகர், கர்நாடக தாய்மொழி கூட்டமைப்பு நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us