தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அரசு மருத்துவமனையில் தீ: உபகரணங்கள் சேதம்

 அரசு மருத்துவமனையில் தீ: உபகரணங்கள் சேதம்

 அரசு மருத்துவமனையில் தீ: உபகரணங்கள் சேதம்


ADDED : ஜூலை 01, 2026 08:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 08:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாவணகெரே: சிடகேரி மருத்துவமனையில், ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததில், அறுவை சிகிச்சை அறையில் தீப்பிடித்தது.

தாவணகெரே நகரில் உள்ள, சிடகேரி மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறையில் ஆக்சிஜன் சிலிண்டர் வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலையில், இந்த சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியதில் தீப்பிடித்தது. மளமளவென தீ பரவியது.

தீப்பிடித்ததும், அங்கிருந்த ஊழியர்கள் பீதியடைந்து, வெளியே ஓடி வந்ததால், உயிர் பிழைத்தனர். சம்பவம் நடந்த போது, அறுவை சிகிச்சை அறையில், நோயாளிகள் யாரும் இல்லாததால், அசம்பாவிதம் ஏற்படவில்லை.

அறுவை சிகிச்சை அறையில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள, மருத்துவ உபகரணங்கள் தீக்கிரையாகின. தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us