ADDED : ஜூலை 01, 2026 08:17 AM

ஷிவமொக்கா: திருமணமான இரண்டு மாதத்தில் புதுப்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஷிவமொக்கா மாவட்டம், ஹனாஜி கிராமத்தை சேர்ந்தவர் சுவாதி, 24. இவர் ஷிவமொக்கா கலேனஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஸ்வரூப், 28, என்பவரை, இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் செய்தார். சுவாதி கர்ப்பமானார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது.
இதனால், சுவாதி, ஹனாஜி கிராமத்திலுள்ள தன் தாய் வீட்டுக்கு சில நாட்களுக்கு முன் சென்றார். இந்நிலையில், நேற்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் சுவாதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சுவாதியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடலை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த சொரபா போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
