/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சபரிமலை பக்தர்களுக்காக 8 சிறப்பு ரயில்கள் இயக்கம்
/
சபரிமலை பக்தர்களுக்காக 8 சிறப்பு ரயில்கள் இயக்கம்
சபரிமலை பக்தர்களுக்காக 8 சிறப்பு ரயில்கள் இயக்கம்
சபரிமலை பக்தர்களுக்காக 8 சிறப்பு ரயில்கள் இயக்கம்
ADDED : டிச 11, 2025 05:53 AM
பெங்களூரு: 'கேரளாவின் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக கர்நாடகாவில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது' என தென்மேற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
ரயில் எண் 07313: எஸ்.எஸ்.எஸ். ஹூப்பள்ளி - கொல்லம் சிறப்பு ரயில், ஜன., 4 முதல் 25ம் தேதி வரையும்;
எண் 07314: கொல்லம் - எஸ்.எஸ்.எஸ். ஹூப்பள்ளி சிறப்பு ரயில், ஜன., 5 முதல் 26ம் தேதி வரையும்;
எண் 06523: எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு ரயில், ஜன., 5 முதல் 26ம் தேதி வரையும்;
எண் 06524: திருவனந்தபுரம் வடக்கு - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு சிறப்பு ரயில், ஜன., 6 முதல் 27ம் தேதி வரையும்;
எண் 06547: எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு ரயில், ஜன., 1 முதல் 29 ம் தேதி வரையும்;
எண் 06548: திருவனந்தபுரம் வடக்கு - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு சிறப்பு ரயில், ஜன., 2 முதல் 30 ம் தேதி வரையும்;
எண் 06555: எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு ரயில், ஜன., 2 முதல் 30 ம் தேதி வரையும்;
எண் 06556: திருவனந்தபுரம் வடக்கு - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு சிறப்பு ரயில், ஜன., 4 முதல் பிப்., 1ம் தேதி வரையும் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.

