தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பரத நாட்டியத்தில் சாதனை படைக்கும் 8 வயது சிறுமி

பரத நாட்டியத்தில் சாதனை படைக்கும் 8 வயது சிறுமி

பரத நாட்டியத்தில் சாதனை படைக்கும் 8 வயது சிறுமி


UPDATED : நவ 16, 2026 12:00 AM

ADDED : நவ 15, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 12:00 AM ADDED : நவ 15, 2026 07:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

– நமது நிருபர் –: கலையில் சாதிக்க வயது தடையில்லை என்பது நிரூபித்து வருகிறார், மைசூரு ஜே.எஸ்.எஸ்., பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி யாஷிகா, 8. மைசூரை சேர்ந்த கிஷோர் – ரூபா தம்பதியின் மகள்.

இவருக்கு பரதநாட்டியம் மீது அதிக ஆர்வம். இதனால், தனது மூன்று வயதிலிருந்து பரதநாட்டியம் பயிற்சி பெற்று வருகிறார். இவர் ஆரம்பத்தில் குமாரி ரிச்சதேவ் என்பவரிடம் நாட்டியம் கற்றுக்கொண்டார். தற்போது, மிருதுளா அமர்நாத் என்பவரிடமும் பரதம் கற்றுக்கொண்டு வருகிறார்.

இவர் தனது கண்களை கட்டிக்கொண்டு பரத நாட்டியம் ஆடுவது மட்டுமின்றி, கண்களை திறக்காமலேயே எண்கள், நிறங்களை அடையாளம் காணும் அபூர்வ திறமை உடையவர். இவர் கடந்த ஆண்டு தொடர்ச்சியாக ஐந்து நிமிடங்கள் கண்ணை துணியால் கட்டிக்கொண்டு நாட்டியம் ஆடினார். நிறங்களை அடையாளம் கண்டார்.

இதை பார்த்தோர் ஆச்சரியம் அடைந்தனர். இதை பாராட்டி அவருக்கு ‘மைசூரு ரத்னா’ விருது வழங்கப்பட்டது. நவரச கலாரத்னா விருதும் வழங்கப்பட்டது.

இதே சாதனைக்காக, இந்தியன் புக் ஆப் ரெக்கார்டில் சமீபத்தில் இடம்பிடித்து உள்ளார். இது, சிறுமியின் பெற்றோருக்கு மகிழ்ச்சியை தந்து உள்ளது. இது குறித்து, அவரது தந்தை கிஷோர் கூறியதாவது:

என் மகள், ஐந்து ஆண்டுகளாக பரதநாட்டியம் பயிற்சி பெற்று வருகிறார். குழந்தைகளின் விருப்பத்தை தெரிந்துக்கொண்டு பெற்றோர் நடக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us