தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 869 போலி வங்கி கணக்கு துவக்கி மோசடி: 68 பேர் கைது

 869 போலி வங்கி கணக்கு துவக்கி மோசடி: 68 பேர் கைது

 869 போலி வங்கி கணக்கு துவக்கி மோசடி: 68 பேர் கைது


ADDED : பிப் 21, 2026 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 04:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'கர்நாடகாவில், 869 போலி வங்கி கணக்குகள் துவக்கி, சைபர் மோசடியில் ஈடுபட்ட, 68 பேர் கைது செய்யப்பட்டனர்' என, கர்நாடக சைபர் கமாண்ட் அலுவலகம் அறிவித்து உள்ளது.

கர்நாடகாவில் சில ஆண்டுகளாக, 'டிஜிட்டல்' கைது உட்பட பல பெயர்களில், முதியவர்கள், பெண்கள் உட்பட பலரை ஏமாற்றி, கோடிக்கணக்கான பணத்தை சைபர் குற்றவாளிகள் மோசடி செய்துள்ளனர். இதுதொடர்பாக, சைபர் கமாண்ட் சென்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சைபர் குற்றங்கள் தொடர்பாக கர்நாடகாவில், 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதுவே நாடு முழுதும் 8,788 புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக, என்.சி.ஆர்.பி., என்ற, தேசிய குற்ற ஆவண காப்பக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் அடிப்படையில், சைபர் கமாண்ட் சென்டர் டி.ஜி.பி., பிரணாப் மொஹந்தி மேற்பார்வையின் கீழ், 2025 டிசம்பர் முதல், 2026 பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில், மாநிலம் முழுதும் போலீசார் சிறப்பு விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், போலி வங்கி கணக்குகள், போலி வங்கி கணக்கை நிர்வகித்தவர்கள் என, 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து, 35 ஏ.டி.எம்., கார்டுகள், 37 வங்கி கணக்கு புத்தகங்கள், 80 மொபைல் போன்கள், 28 காசோலைகள், 22 சிம் கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சந்தேகத்துக்கு இடமில்லாத அப்பாவி நபர்களிடம் இருந்து, அவர்களின் தனிப்பட்ட தகவல்களையும், ஆவணங்களையும் சேகரிப்பர். பின், தங்களது உறவினர்கள் பெயரில் பல வங்கி கணக்குகளை துவக்கி, மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us