தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'தினமலர்' நுாலகத்திற்கு வந்த 88 வயது முதியவர் நெகிழ்ச்சி

 'தினமலர்' நுாலகத்திற்கு வந்த 88 வயது முதியவர் நெகிழ்ச்சி

 'தினமலர்' நுாலகத்திற்கு வந்த 88 வயது முதியவர் நெகிழ்ச்சி


ADDED : பிப் 12, 2026 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 05:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'தினமலர்' நுாலகத்திற்கு நேற்று 88 வயது முதியவர் வருகை தந்தார். வயதானலும் அதை வெளியில் காட்டி கொள்ளாமல், 'ஏஜ் ஸ் ஜஸ்ட் நம்பர் புரோ' என்று நிறைய பேர் சொல்வது, நிரூபணம் ஆன தருணமாக இருந்தது.

பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள, 'தினமலர்' அலுவலகத்தில், 'கடல் தாமரை புத்தக பூங்கா' என்ற பெயரில், கடந்த 6ம் தேதி நுாலகம் திறக்கப்பட்டு உள்ளது. மறுநாளில் இருந்து நுாலகத்திற்கு, நிறைய பேர் வருகை தர ஆரம்பித்தனர்.

தம்பதி சமேதராகவும் வந்து புத்தகங்களை வியப்புடன் பார்த்தனர். இதுவரை 70 வயதுக்கு உட்பட்டவர்கள் வந்த நிலையில், முதல்முறையாக நேற்று, 88 வயது முதியவர் பலராமன் வந்தார்.

தமிழகத்தின் கும்பகோணத்தை சேர்ந்த அவர், தற்போது பெங்களூரு உத்தரஹள்ளியில் வசிக்கிறார். உத்தரஹள்ளியில் இருந்து சிவாஜிநகருக்கு 25 கி.மீ., துாரம் பயணம் செய்து வந்த அவர், புத்தகங்களை ஆர்வமாக எடுத்து புரட்டி படித்தார்.

அப்போது அவரது முகத்தில் உற்சாகம் களைகட்டி இருந்தது.

நுாலகம் குறித்து பலராமன் கூறியதாவது:

இங்கு வந்தது ரொம்ப, ரொம்ப சந்தோஷமாக இருக்கு. குழந்தைகள் முதல் பெரியவங்க வரை படிக்குற மாதிரி, புத்தகத்தை இங்கு குவிச்சு வச்சிருங்கீங்க.

இத விட என்ன வேணும்னு சொல்லுங்க. ஆன்மிகம் சார்ந்த புத்தகங்கள் சூப்பரோ சூப்பர். எனக்கு 88 வயது ஆனாலும், இந்த நுாலகத்துக்கு வரணும்னு ஆசை இருந்துச்சு.

காலையில 8:15 மணிக்கே வீட்டுல இருந்து கிளம்பிட்டேன்; கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் டிராவல் பண்ணி இங்கே வந்துருக்கேன். புத்தங்களோடு இணைச்சு, ஒவ்வொரு நாளையும் கொண்டாடணும். நடுத்தர மக்களுக்கு இந்த புத்தகங்கள கொண்டு போய் சேர்க்கணும். இவ்வாறு அவர் கூறினார்.

பொதுவாக வயதானவர்களால் எதுவும் செய்ய முடியாது என்று, சிலர் நினைப்பது உண்டு.

அந்த எண்ணத்தை உடைக்கும் வகையில், சில முதியவர்கள் எங்களால் எல்லாம் முடியும் 'ஏஜ் ஸ் ஜஸ்ட் நம்பர் புரோ' என்று சொல்வர். இது உண்மை என்று நிரூபணம் ஆன தருணமாக, நுாலகத்திற்கு பலராமன் வருகை தந்தது இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us