/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மைசூரு தசரா ஜம்பு சவாரி ஆக., 4ல் 9 யானை புறப்பாடு
/
மைசூரு தசரா ஜம்பு சவாரி ஆக., 4ல் 9 யானை புறப்பாடு
ADDED : ஜூலை 26, 2025 04:52 AM

பெங்களூரு: மைசூரு தசரா விழாவின் போது நடக்கும் ஜம்பு சவாரியில் பங்கேற்க உள்ள யானைகளில், ஒன்பது யானைகள் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்டரே நேற்று முன்தினம் அளித்த பேட்டி:
இந்தாண்டும், அபிமன்யு தலைமையில் ஜம்பு சவாரி நடக்கும். இதில் பங்கேற்க உள்ள 14 யானைகளில், முதல் கட்டமாக ஒன்பது யானைகள், மைசூரின் நாகரஹொளே புலிகள் வனப்பகுதியில் உள்ள வீரனஹொசஹள்ளி கிராமத்தில் இருந்து ஆக., 4ம் தேதி புறப்படும்.
நாகரஹொளேயின் மத்திகோடு யானைகள் முகாமில் உள்ள அபிமன்யு, 59, 'கும்கி' யானையாகவும் இருந்துள்ளது. இதுவரை 300 யானைகளுக்கு பயிற்சி அளித்து உள்ளது. 80 யானைகளை பிடிக்க பயன்படுத்தப்பட்டு உள்ளது.
முதல்கட்ட யானைகள் குழுவில், மத்திகோடு முகாமின் பீமன், 25, துபாரே முகாமின் கஞ்சன், 24, தனஞ்செயா, 44, பிரசாந்த், 53, பல்லே யானைகள் முகாமின் மகேந்திரா, 42, பெரியஹரவே யானைகள் முகாமின் ஏகலவ்யா, 40, துபாரே யானைகள் முகாமின் காவேரி, 45, லட்சுமி, 53, புறப்படுகின்றன. இரண்டாம் கட்டமாக ஐந்து யானைகளின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வனத்துறை முதன்மை தலைமை வன அதிகாரி மீனாட்சி நேகி, முதன்மை வன விலங்கு வார்டன் ரே, மைசூரு சர்க்கிள் வன பாதுகாவலர் மாலதி பிரியா, மூத்த அதிகாரிகள் மகேஷ் சிரூர், மனோஜ் குமார், பிரபு கவுடா பிரதார் இருந்தனர்.