தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 9 மொபைல் போன், 11 சிம் கார்டு மைசூரு சிறையில் பறிமுதல்

 9 மொபைல் போன், 11 சிம் கார்டு மைசூரு சிறையில் பறிமுதல்

 9 மொபைல் போன், 11 சிம் கார்டு மைசூரு சிறையில் பறிமுதல்


ADDED : டிச 18, 2025 07:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 18, 2025 07:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: மைசூரில் உள்ள மத்திய சிறையை, சிறைத்துறை டி.ஜி.பி., அலோக் குமார் நேற்று ஆய்வு செய்யும் முன், 9 மொபைல் போன்கள், 11 சிம் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கர்நாடக மாநில சிறைத்துறை டி.ஜி.பி.,யாக அலோக் குமார் பதவியேற்றதும், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆய்வு மேற்கொண்டார் .

அதன்பின் நேற்று மதியம் மைசூரு நகருக்கு வந்த அவர், மைசூரு சிறைச்சாலையை ஆய்வு செய்தார். அப்போது கைதிகள், சிறை ஊழியர்களின் கோரிக்கையை கேட்டு கொண்டார்.

சிறைக்குள் மட்டுமின்றி, சிறைக்கு வெளியே சுற்றுப்பகுதிகளையும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

'சட்டத்தை மதிக்க வேண்டும். வருங்காலத்தில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடக்கூடாது. சிறையில் இருந்து வெளியே சென்றதும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என சிறை கைதிகளுக்கு, எச்சரிக்கை விடுத்தார்.

பின், சிறையில் இருந்து வெளியே வந்த பின் அவர் அளித்த பேட்டி:

மைசூரு சிறைக்கு திடீரென ஆய்வு செய்ய வேண்டும் என்பதற்காக வந்தேன்.

ஆனால், சிறை அதிகாரிகளே இன்று (நேற்று) காலை முதல் மதியம் வரை சிறையில் ரெய்டு நடத்தி, ஒன்பது மொபைல் போன்கள், 11 சிம் கார்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

ஆடைகளில் மறைத்து கொண்டு வரப்பட்ட போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. ஏஐ தொழில்நுட்பம் கொண்ட கண்காணிப்பு கேமராக்கள், சிறைக்குள் உள்ளேயும், வெளியேயும் பொருத்தப்படும்.

இதுபோன்று பெங்களூரு, கலபுரகி, பெலகாவி சிறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us