தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உட்பட 9 பேர் கைது

 முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உட்பட 9 பேர் கைது

 முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உட்பட 9 பேர் கைது


ADDED : ஜூன் 16, 2026 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2026 06:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெலகாவி: முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில், தடயவியல் ஆய்வக ஊழியர்கள் தொடர்பு கொண்டிருப்பது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக அவரது மனைவி, கள்ளக்காதலன் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெலகாவி எஸ்.பி., ராமராஜன் நேற்று அளித்த பேட்டி:

பெலகாவி மாவட்டம், ஹுக்கேரி தாலுகாவின் கொடகேரி கிராமத்தை சேர்ந்தவர் சந்தீப் கலகவுடா மாஞ்சேரி, 46. இவர் ராணுவத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர்.

இவர், மூன்று மாதங்களுக்கு முன், சாலை விபத்தில் இறந்தார். இவர் விபத்தால் இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, அவரது பெற்றோர், யம்கன்மரடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசாரும், சந்தீப் மாஞ்சேரியின் உடலை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில், சந்தீப்பின் மனைவி சுமா, 40 மீது சந்தேகம் ஏற்பட்டது. இவருக்கு, அதே கிராமத்தில், 'எக் ரைஸ்' கடை வைத்துள்ள பன்டலீகா டொம்பராவுடன், கள்ளத்தொடர்பு இருப்பது தெரிந்தது.

அவரிடம் விசாரணை நடத்திய போது, தன் கள்ளக்காதலர் உட்பட பலருடன் சதி திட்டம் தீட்டி, கணவரை கொன்றதை ஒப்புக்கொண்டார்.

சந்தீப் மாஞ்சேரி, 2 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்திருந்தார். இந்த பணத்தை வைத்து சுகமாக வாழலாம் என, கள்ளக்காதலர் பன்டலீகா டொம்பராவுக்கு, ஆசை காட்டி கொலை திட்டத்துக்கு சுமா சம்மதிக்க வைத்தார்.

கடந்த மார்ச் 13ம் தேதி, சந்தீப் மாஞ்சேரி பைக்கில் இருந்து, தவறி விழுந்து காயமடைந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டிருந்தார். விபத்தில் இறந்தால் இன்சூரன்ஸ் கிடைக்கும் என நினைத்து மருத்துவமனையில் வைத்தே, அவரை கொல்ல முடிவு செய்தனர்.

மார்ச் 15ம் தேதி சுமாவும், பன்டலீகா டொம்பராவும் குளுக்கோஸ் பாட்டிலில் விஷத்தை செலுத்தியும், துாக்க மாத்திரை கொடுத்தும், சந்தீப் மாஞ்சேரியை கொலை செய்தனர்.

விபத்தில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது, மாரடைப்பு ஏற்பட்டு கணவர் இறந்ததாக, போலீசாரிடம் கதை கட்டினார். கொலையை மூடி மறைக்கும் நோக்கில், பிரேத பரிசோதனை அறிக்கையில், சந்தீப் மாஞ்சேரியின் உடலில் விஷம் இருப்பது தெரிந்து விடாமல் தடுக்க, பெலகாவியின் தடயவியல் ஆய்வக டாக்டர்கள், ஊழியர்கள் உட்பட பலருடன் கொலையாளிகள் தொடர்பு வைத்து உள்ளனர்.

பெற்றோரின் புகாரின்படி, சந்தீப் மாஞ்சேரியின் உடலை தோண்டி எடுத்து, இரண்டாவது முறையாக பிரேத பரிசோதனை செய்த போது, அவர் உடலில் விஷம் இருப்பதும், அவர் கொலை செய்யப்பட்டதும் உறுதியானது. அதன்பின் விசாரித்த போது, சதி திட்டம் பற்றி பன்டலீகா விவரித்தார்.

இவரது உறவினரான ராகுல், பார்மசி படித்து கொண்டே, பெலகாவியின் கட்டபிரபாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றுகிறார். விபத்தில் காயமே ஏற்படாத சந்தீப் மாஞ்சேரியை, ராகுலின் உதவியால் இந்த மருத்துவமனையில் சிறப் பு அறையில் சேர்த்தனர்.

அவரை எப்படி கொல்வது என யோசித்த போது, ராகுலே குளுக்கோஸ் பாட்டிலில் விஷம் ஏற்றி கொலை செய்யலாம் என, யோசனை கூறியதுடன், அப்பாட்டிலையும் கொண்டு வந்து கொடுத் தார்.

சுமாவின் தாய், சுகாதார மையத்தில் பணியாற்றுகிறார். இவர் மூலமாக, டாக்டர் பசவராஜ் பஸ்மேவை தொடர்பு கொண்டு உதவி கேட்டனர். இவர் பெல காவி கமிஷனர் அலுவலகத்தில் எப்.டி.ஏ.,யாக பணியாற்றும் அசோக் குஜனாளாவை அறிமுகம் செய்து வைத்தார்.

இவர் மூலம் தடயவியல் ஆய்வகத்தில் பணியாற்றும் குமாஸ்தா அன்னாசாப் நாயக் அறிமுகம் ஆனார்.

அதன்பின் லேப் அசிஸ்டென்ட் சென்னய்யா அடவிசாமி, சீனியர் சயின்டிபிக் ஆபீசர் நாகராஜ் ஆகியோர், 3 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு, தடயவியல் ஆய்வறிக்கையை மாற்றினர்.

கொலை வழக்கில் தடயவியல் ஆய்வக ஊழியர்கள் தொடர்பு கொண்டிருப்பது, கர்நாடகாவில் இதுவே முதன் முறையாகும்.

தடயவி யல் ஆய்வக ஊழியர்களை பயன்படுத்தி, அறிக்கையை மாற்ற முடியும் என்பதை, எங்களால் ஊகிக்கவும் முடியவில்லை. ஆய்வகத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழு கிறது. கொலை தொடர்பாக ஒன் பது பேரை கைது செய்துள்ளோம்.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us