தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு இ - மெயிலில் குண்டு மிரட்டல்

 ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு இ - மெயிலில் குண்டு மிரட்டல்

 ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு இ - மெயிலில் குண்டு மிரட்டல்


ADDED : ஜூன் 17, 2026 12:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2026 12:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரு ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு, மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரின் கோரமங்களா, யஷ்வந்த்பூர், ராஜாஜிநகர், ஞானபாரதி, கஸ்துாரிநகர், ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட் உட்பட, 30க்கும் மேற்பட்ட ஆர்.டி.ஓ., அலுவலகங்களின் மின்னஞ்சலுக்கு, நேற்று மதியம் மின்னஞ்சல் வந்தது.

அதில், ஆர்.டி.ஓ., அலுவலக கழிப்பறைகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1:30 மணியில் இருந்து, 2:00 மணிக்குள் வெடிகுண்டுகள் வெடிக்கும் என, கூறப்பட்டு இருந்தது.

அதிர்ச் சி அடைந்த ஆர்.டி.ஓ., அலுவலக ஊழியர்கள், போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற போலீசார், அங்கிருந்தோரை வெளியேற்றினர். மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் 'மெட்டல் டிடெக்டர்' கருவி மூலம் ஆய்வு செய்தனர்.

ஆனால், வெடிகு ண்டோ, சந்தேகப்படும்படியான பொருட்களோ சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல், புரளி என தெரிந்தது. மின்னஞ்சல் வந்த முகவரி மூலம் அதை அனுப்பியவர் யார் என்று, போலீசார் விசாரிக்கின்றனர்.

இதற்கு முன்பும் பெங்களூரில் பள்ளி, கல்லுாரிகள், விமான நிலையங்கள், பாஸ்போர்ட் அலுவலகங்கள், அரசு அலுவலகங்களுக்கு இது போல, மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us