தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கே.பி.எஸ்.சி., ஊழல் 90 சதவீதம் மறைப்பு: மத்திய அமைச்சர் குமாரசாமி தகவல்

கே.பி.எஸ்.சி., ஊழல் 90 சதவீதம் மறைப்பு: மத்திய அமைச்சர் குமாரசாமி தகவல்

கே.பி.எஸ்.சி., ஊழல் 90 சதவீதம் மறைப்பு: மத்திய அமைச்சர் குமாரசாமி தகவல்


UPDATED : அக் 25, 2026 12:00 AM

ADDED : அக் 24, 2026 09:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2026 12:00 AM ADDED : அக் 24, 2026 09:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''முன்னாள் முதல்வர் சித்தராமையா தொடர்பான ரகசிய விசாரணை 80 சதவீதம் முடிந்துள்ளது. ஆனால் கே.பி.எஸ்.சி., ஊழல், 90 சதவீதம் மூடி மறைக்கப்பட்டுள்ளது,'' என, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி குற்றம்சாட்டினார்.

ஹாசன் மாவட்டம் ஹொளேநரசிபுரா தாலுகாவில் உள்ள ஸ்ரீரங்கநாத சுவாமி கோவிலில் மத்திய அமைச்சர் குமாரசாமி, அவரது சகோதரர் ரேவண்ணா ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

பின், குமாரசாமி அளித்த பேட்டி:

முன்னாள் முதல்வர் சித்தராமையா தொடர்பான ரகசிய விசாரணை, 80 சதவீதம் முடிந்து விட்டதாக, உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கூறி உள்ளார்.

அப்படி என்றால், கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக தேர்வு ஆணைய முறைகேடு விசாரணையில் என்ன நடந்தது... கே.பி.எஸ்.சி., ஊழல் 90 சதவீதம் மூடி மறைக்கப்பட்டு உள்ளது.

தங்களுக்கு ஏற்ற அதிகாரிகளை நியமித்து, முறைகேடுகளை மூடிமறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ரகசிய விசாரணை குறித்து விசாரிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறினாலும், விசாரணையை திசை திருப்பவும், குற்றம்சாட்டப்பட்டவருக்கு முன்ஜாமின் பெற்றுத்தரும் செயலில் அரசு ஈடுபட்டு வருகிறது.

இவ்வழக்கு தொடர்பாக, எங்கள் கட்சி சமூக ஊடகபிரிவினரின் மொபைல் போன்கள், மடிக்கணினியை பரிசோதித்து கொள்ளலாம்.

ரகசிய விசாரணை தொடர்பாக, 170 முதல், 180 வழக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாயின. எத்தனை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என்று கூற முடியுமா...

இவ்வழக்கில் விசாரணை அதிகாரிகளுக்கு சுதந்திரமும், வெளிப்படை தன்மையும் முக்கியம். விசாரணை என்ற பெயரில் வழக்கை மூடி மறைக்க முயற்சிக்கின்றனர்.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us