/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
97,154 புலம் பெயர் தொழிலாளர்கள் கர்நாடகாவில் வசிப்பதாக தகவல்
/
97,154 புலம் பெயர் தொழிலாளர்கள் கர்நாடகாவில் வசிப்பதாக தகவல்
97,154 புலம் பெயர் தொழிலாளர்கள் கர்நாடகாவில் வசிப்பதாக தகவல்
97,154 புலம் பெயர் தொழிலாளர்கள் கர்நாடகாவில் வசிப்பதாக தகவல்
ADDED : ஆக 24, 2025 11:13 PM
பெங்களூரு,: கர்நாடகாவில் 97,154 புலம் பெயர் தொழிலாளர்கள் வசிப்பதாகவும், இதில் ஆறு வடமாநில தொழிலாளர்களே அதிகம் இருப்பதாகவும் மாநில தொழிலாளர் நலத்துறை தெரிவித்து உள்ளது.
வட மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் பெங்களூரு உட்பட கர்நாடகாவுக்கு தினமும் பிழைப்புக்காக வந்து கொண்டிருக்கின்றனர். சில வட மாநில இளைஞர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் போது, அவர்கள் குறித்த தகவல்களை பெறுவதில் போலீசாருக்கு சிக்கல் நிலவுகிறது.
இதற்கு, அவர்கள் வேலை செய்யும் ஹோட்டல்கள், நிறுவனங்கள் ஆகியவை முறையான தகவல்களை பெறாததும் காரணமாக உள்ளது.
இது போன்ற சூழலில் மாநில அரசின் தொழிலாளர் நலத்துறை, கர்நாடகாவில் வசிக்கும் அண்டை மாநில தொழிலாளர்கள் குறித்த தகவல்களை வழங்கி உள்ளது.
இதன்படி, பல நிறுவனங்கள், நல வாரிய சங்கங்கள் ஆகியவற்றில் பதிவு செய்த வேறு மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், கர்நாடகாவில் பிற மாநிலங்களை சேர்ந்த 97,154 புலம் பெயர் தொழிலாளர்கள் உள்ளனர்.
இதில், பீஹார் 22,374; அசாம் 13,973; ஒடிஷா 13,140; ஜார்கண்ட் 11,734; மேற்கு வங்கம் 11,179; உத்தர பிரதேசம் 10,155 என ஆறு மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெங்களூரிலே வசிக்கின்றனர்.
அதுபோல, ஒப்பந்ததாரர்கள் பிற மாநிலங்களிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வரும் போது, வேலைவாய்ப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் படி பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும் தொழிலாளர்களுக்கு மருத்துவம், கல்வி போன்ற பல சேவைகள் வழங்கப்படும். எனவே, தொழிலாளர்கள் அனைவரும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.