/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் மவுசு குறையாத மூங்கில் விசிறி
/
தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் மவுசு குறையாத மூங்கில் விசிறி
தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் மவுசு குறையாத மூங்கில் விசிறி
தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் மவுசு குறையாத மூங்கில் விசிறி
ADDED : நவ 23, 2025 04:15 AM

: ஏர் கண்டிஷன், ஏர் கூலர்கள், மின் விசிறிகள் ஆதிக்கம் செலுத்தினாலும், மேதர் சமூகத்தை சேர்ந்த மக்கள், தாங்கள் மூங்கிலில் தயாரித்த விசிறிகளை விற்பனை செய்கின்றனர்.
மைசூரு நகரின் அக்ரஹாராவில் உள்ள 101 கணபதி கோவில், சென்னகிரிகொப்பாவில் உள்ள பயில்வான் பசவய்யா நகர், பன்னிமண்டப பகுதியில் மூங்கில் விசிறிகள், கூடைகள், சிறிய பூக்கூடைகள் பாய்கள் ஆகியவற்றை மேதர் சமூகத்தை சேர்ந்தவர்கள், விற்பனை செய்து வருகின்றனர்.
நவீனமயமாக்கல் இருந்தாலும், நகரின் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளனர். மூங்கிலால் செய்யப்பட்ட பொருட்களுக்கு, விநாயகர் பண்டிகையின் போது, அதிக தேவை இருக்கும்.
மின் வெட்டு நேரங்களில் வெப்பத்தில் இருந்து தப்பிக்க, கைகளால் செய்யப்பட்ட மூங்கில் விசிறிகளை, மக்கள் இன்னமும் பயன்படுத்தி வருகின்றனர். மைசூரில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், மூங்கில் விசிறிகளின் தேவையும் அதிகரித்து வருகிறது.
நஞ்சன்கூடை சேர்ந்த மூங்கில் பொருட்களை விற்கும் கைவினை கலைஞர் சித்து, தன் மனைவி மஞ்சுளாவுடன் இணைந்து பல ஆண்டுகளாக மூங்கில் பொருட்களை செய்து வருகின்றனர்.
கோடை காலத்தில் சிறிய, பெரிய அளவில் மூங்கில் விசிறிகளை செய்கின்றனர். விற்பனையில் மந்த நிலை மாறி உள்ளது.
பிளாஸ்டிக்கால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து விழித்து கொண்ட மக்கள், மீண்டும் மூங்கில் விசிறி பக்கம் தங்கள் கவனத்தை செலுத்தி உள்ளனர்.
பயில்வான் பசவய்யா நகரில் மேதர் சமூகத்தை சேர்ந்த 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தினமும் பல்வேறு வகையான மூங்கில் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்கின்றனர்.
- நமது நிருபர் -

