/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோழியை பிடிக்க முயன்று கிணற்றில் விழுந்த கருஞ்சிறுத்தை
/
கோழியை பிடிக்க முயன்று கிணற்றில் விழுந்த கருஞ்சிறுத்தை
கோழியை பிடிக்க முயன்று கிணற்றில் விழுந்த கருஞ்சிறுத்தை
கோழியை பிடிக்க முயன்று கிணற்றில் விழுந்த கருஞ்சிறுத்தை
ADDED : டிச 16, 2025 11:27 PM

உடுப்பி: கோழியை பிடிக்க முயன்று, கிணற்றில் விழுந்த மூன்று வயது ஆண் கருஞ்சிறுத்தையை வனத்துறையினர் மீட்டனர்.
கடந்த, 14ம் தேதி இரவு, வனப்பகுதியில் இருந்து உணவு தேடி உடுப்பி மாவட்டம் பிரம்மாவரின் அட்ஜீல் கிராமத்துக்கு கருஞ்சிறுத்தை ஒன்று வந்தது. அங்கிருந்த கோழியை துரத்தியுள்ளது.
அப்போது, எதிர்பாராத விதமாக சங்கர் பூஜாரி என்பவரது வீட்டு வளாகத்தில் இருந்த கிணற்றில் விழுந்தது.
கிணற்றில் யாரோ விழுந்து விட்டனர் என கருதிய சங்கர், அங்கு சென்று பார்த்தார். கிணற்றினுள் கருஞ்சிறுத்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். நேற்றுமுன்தினம் காலையில், அவர்கள் கூண்டுடன் வந்தனர்.
கூண்டை கிணற்றில் இறக்கி, சிறுத்தையை பிடித்தனர். பிடிபட்ட சிறுத்தை, குத்ரேமுக் சரணாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைகளின் வனப் பகுதியில் காணப்படும் கருஞ்சிறுத்தை, உடுப்பி மாவட்டத்தில் தென்பட்டு உள்ளது.
நான்கைந்து மாதங்களாக தங்கள் கால்நடைகளை சிறுத்தை துாக்கிச் சென்றதால், அச்சத்தில் இருந்த கிராமத்தினர் நிம்மதி அடைந்தனர்.

