sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பள்ளம் தோண்டிய போது மண் சரிந்து விழுந்து  தர்மபுரி தொழிலாளி பலி

 பள்ளம் தோண்டிய போது மண் சரிந்து விழுந்து  தர்மபுரி தொழிலாளி பலி

 பள்ளம் தோண்டிய போது மண் சரிந்து விழுந்து  தர்மபுரி தொழிலாளி பலி


ADDED : டிச 16, 2025 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2025 11:23 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சர்ஜாபூர்: அடுக்குமாடி குடியிருப்பில், வடிகால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டிய போது, மண் சரிந்து விழுந்ததில் தர்மபுரி தொழிலாளி பலியானார்.

பெங்களூரு சர்ஜாபூர் அருகே தொம்மசந்திரா - வர்த்துார் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், சாக்கடை வடிகால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டும் பணி நேற்று முன்தினம் இரவு நடந்தது.

தமிழகத்தின் தர்மபுரி மாவட்டம் மணியதஹள்ளி கிராமத்தை சேர்ந்த சிதம்பரம், 45 என்பவர் மட்டும் தனியாக, பள்ளம் தோண்டி மண்ணை எடுத்து மேல் பகுதியில் போட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மண் சரிந்து அவர் மீது விழுந்தது. மண்ணில் புதைந்த அவர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்த வர்த்துார் போலீசார், தீயணைப்பு படையினர் அங்கு சென்று, சிதம்பரத்தின் உடலை மீட்டனர்.

சிதம்பரம் சகோதரர் முனியப்பா அளித்த புகாரில், வர்த்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us