/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
யானையின் எடை பார்க்க தலா ரூ.50 60 ஆண்டுகளாக அசத்தும் மையம்
/
யானையின் எடை பார்க்க தலா ரூ.50 60 ஆண்டுகளாக அசத்தும் மையம்
யானையின் எடை பார்க்க தலா ரூ.50 60 ஆண்டுகளாக அசத்தும் மையம்
யானையின் எடை பார்க்க தலா ரூ.50 60 ஆண்டுகளாக அசத்தும் மையம்
ADDED : ஆக 27, 2025 11:01 PM

மைசூரு : ''மைசூரு தசரா யானைகளுக்கு எடை பார்க்க ஒரு யானைக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது,'' என எடை இயந்திர உரிமையாளர் கணேஷ் பிரசாத் தெரிவித்தார்.
மைசூரு தசராவுக்கு வரும் யானைகள், எவ்வளவு எடை உள்ளன என்பது ஆய்வு செய்யப்படும். அதற்கு ஏற்ற வகையில் உணவுகள் வழங்கப்படும். மைசூரு தன்வந்த்ரி சாலையில் 60 ஆண்டுகளாக இயங்கி வரும் லாரிகளுக்கு எடை பார்க்கும் 'சாய்ராம் அண்ட் கோ' என்ற மையம் உள்ளது. இங்கு கடந்த 25 ஆண்டுகளாக யானைகளின் எடை அளவீடு செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து அதன் உரிமையாளர் கணேஷ் பிரசாத் கூறியதாவது:
இம்மையம் என் தந்தை காலத்தில் இருந்து 60 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. தசராவில் பங்கேற்கும் யானைகளுக்கு எடை பாக்கும் பணி எங்கள் மையத்தில் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
கடந்த 25 ஆண்டுகளாக யானைகளுக்கு நான் தான் எடை அளவு பார்த்து வருகிறேன். விஜயதசமிக்கு முந்தைய நாளும், யானைகளுக்கு எடை அளவு பார்க்கப்படும். தற்போது ஒவ்வொரு யானைக்கும் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு முறையும் வெவ்வேறு யானைகள் வருவதால், யானைகளின் பெயரை நினைவில் வைப்பது கடினமாக இருக்கிறது. இம்முறை பலராமா, துரோணா, அபிமன்யு, லட்சுமி, சுக்ரீவா என பல யானைகள் 5 - 6 டன் எடை உள்ளன. யானைகளின் எடை அளவு பார்ப்பதில் என் தந்தைக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். அதே சந்தோஷம் எனக்கும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.