ADDED : ஆக 25, 2025 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹாவேரி: கணவர் இறந்த அதே நாளில், மனைவியும் இறந்தார். இருவரையும் ஒரே சிதையில் வைத்து, தகனம் செய்தனர்.
ஹாவேரி மாவட்டம், ராணிபென்னுார் தாலுகாவின் நந்திஹள்ளி கிராமத்தில் வசித்த வர் வீரபசப்பா கோனகேரா, 70. இவரது மனைவி பசம்மா, 60. வயது முதி ர்வு காரணமாக, உடல்நிலை பா திப்பால் அவதிப்பட்ட வீரபசப்பா, நேற்று காலை உயிரிழந்தார். அவரது இறுதி சடங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மாலையில் அவரது உடலை தகனம் செய்ய, ஏற்பாடு நடந்த நிலையில் பசம்மா, குறைந்த ரத்த அழுத்தத்தால் மயங்கி விழுந்து, அதே இடத்தில் உயிரிழந்தார். வாழும் வரை அன்னியோன்யமாக வாழ்ந்த தம்பதி, இறப்பிலும் ஒன்று சேர்ந்தனர். எனவே இருவரையும் ஒரே சிதையில் வைத்து, குடும்பத்தினர் தகனம் செய்தனர்.