sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'உச்' கொட்ட வைக்கும் முட்டை ஊறுகாய்!

 'உச்' கொட்ட வைக்கும் முட்டை ஊறுகாய்!

 'உச்' கொட்ட வைக்கும் முட்டை ஊறுகாய்!


ADDED : மே 30, 2026 02:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2026 02:13 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

பொதுவாக மாங்காய், எலுமிச்சை, காய்கறிகளில் ஊறுகாய் செய்வது வழக்கம். முட்டையிலும் காரசாரமான ஊறுகாய் செய்யலாம். மாறுபட்ட சுவையுடன் இருக்கும். சிறியவர் முதல் பெரியவர் வரை, அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

தேவையான பொருட்கள்

l வேகவைத்த முட்டைகள் - - 6

l நல்லெண்ணெய் - 4 முதல் 5 டேபிள் ஸ்பூன்

l கடுகு - 1/2 டீஸ்பூன்

l சோம்பு - - 1/2 டீஸ்பூன்

l பூண்டு - - 10 பற்கள்

l இஞ்சி - - சிறிய துண்டு

l கறிவேப்பிலை - - 1 கொத்து

l மிளகாய் துாள் - ஒன்றரை ஸ்பூன் (காரத்திற்கு ஏற்ப)

l மஞ்சள் துாள் - - 1/4 ஸ்பூன்

l சீரகத் துாள் - - 1/2 ஸ்பூன்

l வெந்தய துாள் - - 1/4 டீஸ்பூன்

l வினிகர் - -ஒன்றரை டேபிள் ஸ்பூன் - ஊறுகாய் நீண்ட நாட்கள்

l கெடாமல் இருப்பதற்காக.

செய்முறை

முதலில், வேக வைத்த முட்டைகளின் ஓடுகளை நீக்கி விட்டு, மஞ்சள் கரு வெளியே வராதபடி, கத்தியால் முட்டைகளில் லேசான கீறல்களை போடவும். வாணலியை அடுப்பில் வைத்து, 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் மஞ்சள் துாள், மிளகாய் துாள் சேர்க்கவும். இந்த கலவையில் முட்டைகளை போட்டு, பொன்னிறமாக மாறும் வரை வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும்.

அதே வாணலியில் மிச்சமுள்ள எண்ணெயை ஊற்றவும். சூடானதும் கடுகு, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து, மிளகாய் துாள், சீரக துாள், வெந்தய துாள், உப்பு சேர்த்து கருகாமல் வதக்கவும்.

இதில் முட்டைகளை போட்டு, மெதுவாக கிளறவும். அதன் பின், வினிகர் சேர்த்து, ஒரு நிமிடம் கிளறினால் சுவையான முட்டை ஊறுகாய் தயார்.

இதை, ஆறியதும் காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைக்கவும். வினிகர் சேர்ப்பதால், குளிர் சாதன பெட்டியில் வைக்காவிட்டாலும், இரண்டு வாரங்கள் வரை கெட்டுப்போகாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us