/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மருந்து என நினைத்து எலி விஷத்தை தின்ற ஏட்டு பலி
/
மருந்து என நினைத்து எலி விஷத்தை தின்ற ஏட்டு பலி
ADDED : ஜூலை 30, 2025 07:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மங்களூரு : மருந்து என நினைத்து எலி விஷத்தை தின்ற தலைமை ஏட்டு உயிரிழந்தார்.
தட்சிணகன்னடா, மங்களூரு நகரின், சுரத்கல்லில் வசித்தவர் மஞ்சுநாத் ஹெக்டே, 44. இவருக்கு திருமணமாகி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
மஞ்சுநாத் ஹெக்டே மங்களூரு வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில், தலைமை ஏட்டாக பணியாற்றினார். உடல் நிலை பாதிப்பால் அவதிப்பட்ட அவர், ஆயுர்வேத மருந்து சாப்பிட்டு வந்தார்.
இவர் நேற்று முன்தினம், மருந்து என நினைத்து, எலி விஷத்தை தின்றுவிட்டார்.
இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரை, குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி, நேற்று அவர் உயிரிழந்தார்.