/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஏக்கரில் 50 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் விவசாயி
/
ஏக்கரில் 50 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் விவசாயி
ADDED : ஆக 10, 2025 02:42 AM

கர்நாடகா மாநிலம், மைசூரை சேர்ந்தவர் பி.எஸ்.ஹர்ஷித், 30. இவர், மைசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். 2020ம் ஆண்டு கொரோனா காலத்தில், வேலை இல்லாத சூழல் ஏற்பட்டது. அப்போது, என்ன செய்யலாம் என யோசித்தார்; விவசாயம் செய்யவும், இதற்காக தன் வீட்டில் உள்ள தோட்டத்தில், 'அவகோடா' எனும் வெண்ணெய் பழத்தை பயிரிட நினைத்தார்.
இருப்பினும், விவசாயம் குறித்து எதுவும் தெரியாது என்பதால், வேளாண்மையில் டிப்ளமோ படிக்க முடிவு செய்தார். பெங்களூரு அருகே உள்ள ஹெசரகட்டாவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் டிப்ளமோ பட்டம் பெற்றார்.
ரூ.10,000 இந்த படிப்பின்போது, கிடைத்த படிப்பினைகளை வைத்து, ஹர்ஷித் 2,000 சதுர அடியில் உள்ள தன் தோட்டத்தில், வெண்ணெய் பழங்களை பயிரிட துவங்கினார். இதற்காக, 4 லட்சம் ரூபாய் செலவு செய்து, 10,000 வெண்ணெய் மரக்கன்றுகளை வாங்கினார். இதை நல்ல படியாக பயிரிட்டார். 2021ல் முதல் அறுவடையை துவங்கினார். அப்போது, 10 லட்சம் ரூபாய்க்கு வருமானம் செய்தார். முதல் முறையிலேயே 6 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது.
இதனால், விவசாயத்தில் தீவிரமாக இறங்கினார். வெண்ணெய் பழம் மரக்கன்றுகளை மொத்த வியாபாரமாக வியாபாரிகளுக்கும் விற்று வந்தார். இவர், வெண்ணெய் பழங்களில் பல வகைகளை பயிரிடுகிறார். மரபணு மாற்றம் செய்யப்பட்ட, வெளிநாட்டு வகைகளையும் பயிரிடுகிறார். இதை பல நாடுகளுக்கும் ஏற்றுமதியும் செய்கிறார்.
விற்பனை குறிப்பாக, 2024ல் 50,000 மரக்கன்றுகளை உருவாக்கி விற்பனை செய்தார். இதன் மூலம் 25 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது. கர்நாடகாவின் பல பகுதிகள், ஆந்திரா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்கும் விற்பனை செய்து வருகிறார்.
ஒரு ஏக்கரில் வெண்ணெய் பயிர்களை பயிரிடுவதன் மூலம், 50 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்.
- நமது நிருபர் -

