தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வயலில் சுற்றித்திரிந்த பெண் புலி பிடிபட்டது

 வயலில் சுற்றித்திரிந்த பெண் புலி பிடிபட்டது

 வயலில் சுற்றித்திரிந்த பெண் புலி பிடிபட்டது


ADDED : நவ 29, 2025 06:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 06:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: வயலில் சுற்றித்திரிந்த பெண் புலியை மயக்க மருந்து ஊசி செலுத்தி வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர்.

மைசூரு நாகரஹொளே பாதுகாக்கப்பட்ட புலிகள் வனப்பகுதிக்கு அருகே கவுனடகட்டே கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நேற்று முன்தினம் இரவு புலி சுற்றித்திரிந்தது.

இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், புலியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

வனத்துறையினர் நீண்ட நேரம் தேடியும் புலியை பிடிக்க முடியவில்லை. இதனால், அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

புலியை பிடிக்காமல் கிராமத்தை விட்டுச் செல்லக்கூடாது என, அதிகாரிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது பதற்றம் நிலவியது. கிராமத்தினரை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

இதனிடையே, வயலில் புலி நடமாடுவதாக சிலர் கூறினர். இதனால் தேடுதல் வேட்டையை வனத்துறையினர் மீண்டும் தொடங்கினர். அப்போது, புலி தென்பட்டது. அதன் மீது மயக்க மருந்து ஊசியை துப்பாக்கி மூலம் செலுத்தி புலியை பிடித்தனர்.

பெண் புலி, 10 வயதுக்கு மேற்பட்டதாக இருக்கலாம் என, வனத்துறையினர் தெரிவித்தனர். கூண்டில் அடைத்து வாகனத்தில் ஏற்றி, அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விடப்போவதாக கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us