sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ குப்பைக்கு தீ வைத்த போது தீயில் சிக்கி காவலாளி மரணம்

 குப்பைக்கு தீ வைத்த போது தீயில் சிக்கி காவலாளி மரணம்

 குப்பைக்கு தீ வைத்த போது தீயில் சிக்கி காவலாளி மரணம்


ADDED : மார் 19, 2026 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 05:20 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மைசூரு: மைசூரு திரையரங்கு வளாகத்தில் குப்பைக்கு தீ வைத்த போது, அருகில் இருந்த மர சாமான்களில் பற்றிய தீயை அணைக்க முயற்சித்த, 75 வயது காவலாளி, தீயில் சிக்கி உயிரிழந்தார்.

மைசூரு கே.ஆர்.எஸ்., சாலையில் கோகுலம் திரையரங்கு உள்ளது. இங்கு மேட்டுகள்ளியை சேர்ந்த மரி செட்டு, 75, காவலாளியாக பணியாற்றி வந்தார்.

தற்போது இந்த திரையரங்கில் படங்கள் எதுவும் ஓடுவதில்லை. எனவே, மரி செட்டுக்காக, வளாகத்தில் ஷெட் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த ஷெட்டில், அவரும், அவரது மனைவியும் தங்கி, திரையரங்கை சுத்தம் செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் கா லை சுத்தம் செய்து, குப்பையை தீ வைத்தனர். தீ மளமளவென எரிந்து அருகில் இருந்த மர சாமான்களுக்கும் பரவியது.

அதிர்ச்சியடைந்த தம்பதி, மரச்சாமான்களை அகற்றினர். அப்போது, மர சாமான்கள் மரி செட்டி மீது விழுந்தது. உதவி கேட்டு இருவரும் கூச்சலிட்டும், அருகில் இருந்தவர்களுக்கு கேட்கவில்லை.

திரையரங்கு வளாகத்தில் இருந்த புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வருவதற்குள், மரி செட்டி தீயில் சிக்கி உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர், தீயை அணைத்தனர். வி.வி.புரம் போலீசார், மரி செட்டி மனைவியிடம் விசாரித்தபோது, மேற்கண்ட விபரங்களை தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us